பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னேயைக் குறிப்பதாகும். முதற் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை ஆசிரியனுடைய பண்பாட்டையே நூல் விளக்கி நிற்கிறது. என்று கூறியுள்ளார். இதனுல் அவர் அச்சுப்படிகளை திருத்துவது கூட இல்லை. காங்க்கார்டின் தலைமை நில ஆய்வாளராகவும், இயற்கை வல்லுநராகவும் இருந்த தோரோ, விவசாயத் திலும் அதிக அனுபவமுடையவர். அண்டை அயலார் கட்கு, அவர்களுடைய நிலங்களைப்பற்றிக்கூடப் பல நுணுக்கங்களை எடுத்துக் கூறினர். பிறருடைய நிலங்களின் உள்ளே நுழைந்து திரியும் சோம்பேறி என அவரைக் கருதியவர்கள் பலரும், இறுதியில் அவரைப் போற்றுபவர் களாகவும் நண்பர்களாகவும் மாறினர். கற்பனை சிறிதும் இல்லாமல், வெறும் உடல் உழைப்பை மட்டும் மேற். கொண்ட ந்யூ இங்கிலாந்து மக்கள் பலரும், தோரோ ஓயாமல் அலைவதில் ஏதோ காரணம் இருக்க வேண்டுமென முடிவு செய்தனர். கழுகுகளேயும், வாத்துக்களையும் வேறு இனம் பிரித்து அடையாளம் அறிவதற்காக அவரிடம் கொணர்ந்தனர். புதிய தாவரங்களே அவருக்குக் காட்டி அவைபற்றி அவர்கள் அறிந்திருப்பதை அவரிடங் கூறினர். * எப்பொழுதும் தோரோ நேர் வழியிலேயே சென்ருர்; பிறரிடம் அன்பாகப் பழகுவதில் சமர்த்தர்...... என்னுடைய வயலே அவர் கடந்து செல்கையில் அவரிடம் சென்று பேச வேண்டும் என விரும்புவேன். நான் எவ்வளவு நேரம் பேசினுலும் அவரும் இருந்து பேசுவார். அவர் பேசுபவை அனைத்தும் புதுமையாக இருக்கும்’ என ஒரு குடியானவர் தோரோவைப்பற்றிக் கூறியுள்ளார். கற்றறிவுடைய தம் நண்பர்கள் பலரைக் காட்டிலும், இந்தக் கிராமத்தார்களைத் தோரோ மிகவும் போற்றி மதித்தார் என்பதையும், அவர்கள் கூறும் சொற்களே எல்லாம் தம்முடைய குறிப்புப் புத்தகத் தில் போற்றிப் பதிந்து கொண்டார் என்பதையும் அவர்களில் சிலரேனும் அறிந்திருப்பின் எவ்வளவு வியப்படைந்திருப் பார்கள் என்பதில் ஐயமே இல்லை ! அதில் நுழைந்து உழைப்பவர்கட்குத் தோரோவின் நாட்குறிப்பு ஒரு சுரங்கம் போல் பயனளித்துள்ளது எனினும், இன்றுங்கூட அதிற் புகுந்து உழைத்தால் 109