பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும் ஒன்றிரண்டு நூல்கட்காவது விஷயம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லே. தோரோவின் நாட்குறிப்பிலிருந்து, அவர் காலத்தில் வாழ்ந்த அண்டை அயலார் பற்றியுள்ள குறிப்புகளைத் தொகுத்து, காங்க்கார்டின் மக்கள்’ என்ற பெயரில், ஃப்ரேன்ஸிஸ் எச். ஆலன் என்பார் வெளியிட் டுள்ள நூலேவிட மகிழ்ச்சி தரக் கூடிய நூல் வேறு இருக்க முடியாது. காங்க்கார்டில் வா ழ் ந் த அனேவரிடமும், அவர்கள் அறிவாளிகள், வேட்டையாடுபவர், ஊர் சுற்று பவர், இடம் பெயர்ந்தோர், கலப்புச் சாதியினர், குடியான வர், மரம் வெட்டிகள், சோம்பேறிகள் என்ற தொகுப்பில் எதனைச் சார்ந்தவராயினும், அவர்களிடம் மிகுந்த பரிவும் ஆதரவும் காட்டியுள்ளார் என்பதைக் காங்க்கார்டின் மக்கள் என்ற நூல் அறிவிக்கும். ப்ரூக்ஸ் க்ளார்க் என்ற அப்பாவி மனிதர், கோடரி ஒன்றை ஏந்திக் கொண்டு, கன வேகமாகச் சொல்வதைக் கண்ட தோரோ, காலணி இல்லாத அவர் கால்களில் பனிக் காற்றுப்படுவதைக் கண்டு அஞ்சித்தான் வேகமாய் போகிருர் போலும் என்று கூறி யுள்ளார். இத்தகைய அப்பாவி மனிதர்களைக் காண்பதில் மிகவும் விருப்பங் கொண்டார் தோரோ, காலணியைக் கையில் கழற்றிச் சுமந்து செல்லும் ப்ரூக்ஸ் க்ளார்க் அவற்றில் ஒன்றில் காட்டு ஆப்பிள்களையும், மற்றென்றில் இறந்துபோன ராபின் பறவை ஒன்றையும் ஏந்திச் சென்ருர். அவருடைய கிழிந்த கோட்டும் கால்சிராயும் குஞ்சம்போல் தொங்கின. ஒரு சிரிய பையன் காற்றடிக்கும்பொழுது வெளியே சென்று என்ன நிகழ்ந்தது என்று பார்க்கச் செல் வதுபோல் கிளார்க்கும் சென்று வந்ததாகத் தெரிகிறது. மிகவும் இளேத்த உடலோடும், வாழ்க்கையின் அந்திம காலத்தில் உடம்பு இரண்டாக வளைந்துபோன குனிவிலும் மனக் கிளர்ச்சி குன்ருமல் மாலேக் காலத்தைச் செலவிடும் இவரைக் காண்பதில் மகிழ்ச்சி யடைகிறேன். எனக் கூறி யுள்ளார் தோரோ. - வால்டன் காட்டில் மரம் வெட்டும் தொழிலே மேற் கொண்டு, தனிமையாக வாழ்க்கையைக் கழிக்கும் வினுேத் மான அலக் தெரியன் இருந்தார். அவர் முரட்டுத்தன மான பெரிய, ஆளுல், சுறுசுறுப்பில்லாத உடல் உடைய வர். வெயிலின் பழுப்பேறிய கழுத்தும், அடர்ந்த கேச மும், மந்தமான நீல நிறக் கண்களும் கொண்டவர். ஆன 110