பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லும், அவர் தம்முடைய மரங்களே வெட்டும்பொழுது பூமி மட்டத்திற்கே ஒழுங்காகக் கணக்கிட்டு வெட்டினர். அதிலிருந்து புதிய முளேகள் தோன்றும்பொழுது, வளமாக அவை வெளி வந்தன. வெட்டப்பட்ட அடிமரத் துண்டு களின் மேல் சக்கரமில்லாத ஸ்லெட்ஜ் வண்டி தடை யின் றிப் போகக்கூடிய முறையில் அழகாக வெட்டப் பட்டன. அவை. தனிமையாகவும், அமைதியாகவும், சந்தோஷமாகவும் அவர் வாழ்ந்தார். அவருடைய நல் லெண்ணமும், போதுமென்ற மனமும் அவருடைய கண் களில் வெளிப்பட்டன. எளிதில் மகிழ்ச்சி அடைபவர். இயற்கை அவரைப் படைக்கும்பொழுதே வலிய உடம்பை யும், அமைதியையும் அவருக்குத் தந்து, அவரைச் சுற்றி லும் மரியாதையையும், நம்பிக்கையையும் தாங்கும் தூண் களாகப் படைத்து விட்டமையின், அவர் எழுபது ஆண்டு கள் வரை குழந்தைபோல வாழ்ந்து விட்டார்... ... கியாதி யுடையவரும் அறிவாளியுமான ஒரு குடியானவர் அவரைப் பார்த்து இந்த உலகம் மாறுதலடைய வேண்டும் என்று அவர் விரும்பவில்லேயா என்று கேட்டாராம். வியப்பைக் காட்டும் ஒரு புன் சிரிப்புடன் தம்முடைய கானடா நாட்டு உச்சரிப்புடன், இவ்வுலகம் இருக்கும் முறையிலேயே இதை நான் விரும்புகிறேன்’ என்று கூறிஞராம். சுயதேவையைப் பூர்த்தி செய்து கொள்பவராகவும், சிக்கனமுடையவராகவும் இருந்து, வாழ்க்கையில் பெற வேண்டியவற்றுள் சிறந்தவற்றைப் பெற்றிருந்த ரூபன் ரைஸ் மெள்ள வேலைகளைச் செய்தாலும் அவற்றின் பயனே அனுபவித்து வாழ்ந்தார். வயல்களைச் சுற்றித் துப்பாக்கியோடும், நாயோடும் ஓயாது அலேந்து கொண் டிருந்த ஜ்யார்ஜ் மால்வின் என்பவரைத் தோரோ அடிக் கடி சந்தித்தார். அவரைப் பற்றி மால்வினைச் சந்தித்த என் நல்லதிர்ஷ்டத்தைப் போற்றுகிறேன்... ... ஆணுல் தம் தாயாருக்கு மால்வின் ஒரு பிரச்ளேயாகவே இருந்தார் எனினும் மலைப் பகுதிகளில் முளேத்துள்ள ரஸ்ஸ்ட் ஆப்பி ளேப் போல எனக்குப் பொருத்தமாகவே இருக்கிருர். அவர் நடக்கும்பொழுது ஆடிக் கொண்டும் தொள தொளவென்று போட்டுக் கொண்டும், கால்களே ஓயாமல் இழுத்துக் கொண்டும் நடந்தார். அவர் என் காலத்தில் என்னுடன் வாழ்ந்த அயல் வீட்டார். அவர் 111

  • & ہم پچی ۔ * جrr , சடடையைத்