பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வும், குழல் வாசிக்கவும் அவர் இங்குத் தான் கற்றுக் கொண்டார்; அவர் மிகவும் பிரியத்துடன் போற்றிய இசை யோடு இங்குத் தான் முதன் முதலில் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. இக் கலையில் அவர் ஒரளவுதான் பயிற்சியும் அறிவும் பெற்ருர் எனினும், இசை அவரைப் பெரிதும் ஆட் கொண்டது. அதே இசை வேறு எந்த மத போதகரும், மனிதனும் கூருத அளவில் வாழ்க்கையைப் பற்றித் தமக்குப் போதித்தது: என்று கூறியுள்ளார். பிற சாதாரண அறி வுடைய பிள்ளைகளுக்குள்ள அளவு ஆர்வத்தோடுதான் ஹென்றியும் புத்தகங்களைப் படித்தார். பிற்காலத்தில் அவர் எழுதியுள்ளபடி, "ஏட்டுக் கல்வி என்ன செய்கிறது? தானே சுதந்திரமாக வளைந்து வளைந்து ஒடும் ஒடையை ஒரு குறுகிய நேர்கோட்டில் வெட்டி விடுகிறது என்ற முறையில், அக்காலத்தில் அவர் கல்வியைப்பற்றி நினைக்க வில்லை. அது எவ்வாறு இருப்பினும் பள்ளியில் கற்பிக்கப் பெற்ற கணிதம், பிற்காலத்தில் வயல்கள், காடுகள் ஆகிய வற்றின் அளவீட்டாளராக அவர் பணிபுரிவதற்கு உதவி யது. அவர் வாழ்க்கையில் மேற்கொண்ட பிற பணிகளே விட, இது, புறத்தே சென்று காலங் கழிக்க உதவியது. லத்தீன், கிரேக்கம், பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும், கணிதத்திலும் நல்ல அறிவைப் பெற்ற பிறகு, ஹென்றி தோரோ, ஏழை மாணவர்கட்குரிய உதவிச் சம்பளத் துடன் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் புகுந்தார். கல்லூரியில் நல்ல முறையில் அறிவு பெற்று, மூன்ருண்டு களில், சோதனையாளர்களேத் திருப்திப்படுத்தினுலும், அதிக மதிப்புப் பெருத சாதாரண வெற்றியுடன்தான் மீண்டார். அவருடைய ரசனே அப்பழுக்கற்றதாயும், நடத்தை மிகவும் சுதந்திரமுடையதாயும் இருந்தன. அவரைப் பொறுத்தமட்டில், பல்கலைக் கழகம் என்பது, பிற அறிஞர்களுடைய அறிவுச் செல்வத்தைப் பெறுதற்குரிய வாயிலாக இருந்ததே தவிர, சமுதாய நட்பைப் பெறவும், தொழில் முறையில் திறமை பெறவும் ஏற்பட்ட நிறுவன மாக அமையவில்லை. பர்டத் திட்டத்தைப்பற்றி ஒரு சிறி தும் கவலைகொள்ளாமல், கல்லூரி நூலகத்தில் பெரும் பொழுதை, அவராக விரும்பிய ஜெர்மானிய இலக்கியம், 17 ஆம் நூண்ருண்டு ஆங்கில இலக்கியம் என்பவற்றைக் 9