பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னுங்கூட இவற்றைக் கடந்து வர அஞ்சுவார்கள். ஆனல் இவை ஒன்றும் ஒரு கவிஞனே அச்சுறுத்துவதில்லை. ஏன் எனில் அவன் உண்மையான அன்பால் தூண்டப்பெற்று வருகிருன் என்று கூறியுள்ளார். வால்டனில், குளிர் கால மாலைப் பொழுதுகள், ஒரு பாத்திரத்தில் ஊற்றப்பட்ட குழம்புடனும் மிகவும் உரத்த சிரிப்பொலியுடனும் கழிந் தன. பாத்திரத்தில் இருந்த குழம்பு செளஜன்யத்தைத் தந்ததுடன் தத்துவ ஆராய்ச்சிக்கு வேண்டிய அறிவுத் தெளிவையும் தந்த தாம். தோரோவின் பிற்கால நண்பர் களுள் முக்கியமானவர் மெஸ்சூஸிட்ஸில் உள்ள வொர் செஸ்டரில் வாழ்ந்த ஹேரிஸன் ப்ளேக் என்பவராவார். இவர் தோரோவிடம் ஹார்வார்டிலேயே ஒரளவு பழகி இருந்தார். ஆல்ை, பிற்காலத்தில் டயல் பத்திரிக்கை யில் தோரோவைப்பற்றிப் படித்துவிட்டுப் பின்னர் நீண்ட காலம் மிக நீளமான கடிதங்களே அவரிடமிருந்து பெற்று வந்தார். இக் கடிதங்கள், தோரோவின் சிறந்த எழுத்து நடைக்கு உதாரணம் என்று கூற முடியாவிடினும், அவ ருடைய வரலாற்றை எழுதுபவர்க்குப் பெரிதும் பயன் பட்டன. இவற்றில் அவர் தம் உள்ளுணர்ச்சிகளை நன்கு வெளியிட்டுள்ளார். ப்ளேக்கின் அழைப்பின் மேல்தான், தோரோ ஆண்டுதோறும் வொர்செஸ்டரில் சொற்பொழிவு நிகழ்த் திர்ை. ந்யூயார்க் ட்ரிப்யூனச் சேர்ந்த ஹோராஸ் க்ரீலி, இறுதிவரைத் தோரோவின் இலக்கிய ஏஜன்டாக இருந் தார். பல சமயங்களில் தோரோவுக்காகச் செலவு செய் தார். (ஒரு முறை எழுபத்தைந்து டாலர் முன்பணமாகத் தந்தார்.) அடுத்து, ஆல்காட் என்பவர் இருந்தார். அவ ருடைய பெண்கள் இப்பொழுது வளர்ந்து பருவம் அடைந் திருந்தனர். என்ருலும், ஓயாமல் கற்பனை உலகில் சஞ்சரிக் கும் ஆல்காட்டின் தோள்களில் குடும்ப பாரம் மென்மை யாகவே தங்கி இருந்தது. ஆல்காட் கூறிவந்த சமுதாயக் கூட்டு முயற்சிகளில் தோரோவுக்கு நம்பிக்கை இன்றேனும, அவரது அஞ்சா நெஞ்சையும் நேர்மையையும் கண்டு san : * r+ G*rform. எமர்ஸனுக்குக் கோடைகால ിക്കl'A வதில் ஆல்காட் மிகவும் அப்பாவியாக இருந்திருக்கலாம். ஆளுலும், "எங்களுடைய சந்திப்புக்கு எவ்வித இடை யூறும் ஏற்பட்டதில்லை; அவருக்கென்று பிடிவாதமான 116