பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கை ஒன்றுங் கிடையாது; எந்த நிறுவனத்தையும் சேர்ந்தவரல்லர் அவர். நான் சந்தித்தவர்களுள் மிகவும் தெளிந்த அறிவுடையவர் அவர்தாம் ?’ என்று கூறி யுள்ளார். வாழ்நாள் முழுவதிலும், தோரோவுக்குப் பெண்களின் நட்புக்குக் குறைவே இருந்ததில்லை. ஆனல் இளமை யுடையவர்களையும், அழகுள்ளவர்களேயும் அவர் ஒதுக்கியே வந்தார். இது ஒரு புதுமைதான் என்று அவரே கூறி யுள்ளார். ஒரு பெண் நல்ல உறுப்பு நலன் பெற்றிருக் கிருள் என்பதற்காக, அவளிடம் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருப்பதில் யான் எவ்வித இன்பத்தையும் அடைவ தில்லை. இளம் பெண்களுடன் பொழுதைக் கழிப்பதைப் போலப் பயனற்ற செயல் வேறு இல்லை என்றே கருது கிறேன் - என்று கூறியுள்ளார். வாழ்க்கையில் ஏமாற்ற மடைந்த ஒரு பிரமச்சாரியின் மனநிலையை இது ஒரளவு பிரதிபலிக்கிறது. எல்லன் ஸல்வெல்லினுடைய நினைவு ஒரளவு இன்னும் தங்கியுள்ளது போலும்! அது எவ்வாறு இருப்பினும், எல்லனுக்குப் பிறகு பெண்களிடம் அவர் கொண்ட நட்பு ப்ளேட்டோனிக் அன்பைப் போன்றே இருந்தது. லிடியன் எமர்ஸன் போன்றவர்களிடம் (அவரும் நாளாவட்டத்தில் தம்முள் அடங்கித் தனித்தவ ரானுர்) இவ்வாறு நட்புக் கொண்டிருந்தார். லிடியனின் தங்கையாகிய ல்யூஸி ஜேக்ஸன் ப்ரெளனயும் இவ்வகை யிலேயே நேசித்தார். தோரோவுக்கு இருபது வயதாக இருக்கையில், ஒரு முறை, ல்யூஸியின் வீட்டு ஜன்னலின் வழியாக, ஒரு கொத்து வயலட் பூக்களையும் ஒர் இசைப் பாடலேயும் உள்ளே எறிந்தார். எமர்ஸனின் அத்தையும், அதிக வயதானவரும், மிக்க அறிவுடையவரும் ஆகிய மேரி என்பவர் காங்க்கார்டில் இருந்தார். தோரோவின் சமயக் கொள்கைகள் பற்றி இம் மூதாட்டி அஞ்சினுலும், அவருடைய அறிவுத் திறத்தைக் கண்டு மகிழ்ச்சி யடைந் தார். என்னுடைய இளமைக் காலத்தில் இவ்வள்வு தனித் தன்மையுள்ள கருத்துக்களைக் கொண்டிருப்பதைப் பிறர் ஆதரித்ததில்லை என அந்த அம்மையார் அவரிடம் கூறினர். என்ருலுங்கூட, எண்பது வயதுடைய இம்

  • ப்ளேட்டோனிக் அன்பு - உடலுணர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஆன்மிக அன்பு.

117