பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூதாட்டி தோரோவின் கருத்துக்களே ஏற்றுக் கொண்டது போல, காங்க்கார்டில் உள்ள இள வயதுடையவர் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. - எமர்ஸ்இனப் பற்றி என்ன ? வெளிப்பார்வைக்கு அவரும் தோரோவும் காலம் செல்லச் செல்ல மிகவும் நெருக்கமாகிக் கொண்டு வந்தனர். ஹென்றி அடிக்கடி எமர்ஸனுடைய வீட்டிற்குச் செல்வதும், அவரும் எமர்ஸ் னும் முன்னே விட அதிகமாகத் தாவர இயல்பு பற்றி ஆய் வதும் நடந்து வந்தன. மாலைக் காலங்களில் மேற்கொள் ளும் சிற்றுலாக்களில், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிகம் விரும்புவதுபோல் தெரிந்தது. ஆளுல், உண்மை யில் அவர்கள் இருவரும் உள்ளுர மிகவும் விலகிச் சென்ற னர். எமர்ஸ்னுடைய வீட்டில் மாலேக் காலங்களில் நடை பெறும் விவாதங்களில்தான் இப் பிரிவினை விரிவடைந்து வந்தது. உண்மையை நாடிச் செல்லும் இரு கூறுகளாக அவர்கள் இல்லை. அதற்குப் பதிலாக, இந்த இரண்டு தத்துவஞானிகளும், அவரவருடைய முரட்டுத்தனத்தால் அதிகம் பொறுமை இழந்து, விவாதப் போட்டியில் ஈடு படலாயினர். ஒவ்வொருவரும் தத்தம் நாட்குறிப்பில் அடுத்தவரைக் குறை கூறினர். 1853 மே மாதத்தில் தோரோ கீழ்வருமாறு எழுதியுள்ளார்: " எமர்ஸனுடன் பேசினேன் ; பேச முயன்றேன். என்னுடைய காலத்தை இழந்தேன் ; இல்லை ; என்னேயே இழந்தேன். கருத்து வேற்றுமை இல்லாத நிலையிலுங்கூட அவர் பொய்யாக ஒரு வேற்றுமையைக் கற்பித்துக் கொண்டு எனக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றையே என்னிடம் பேசினர் ; இல்லே ; காற்றிற் குப் பேசினர். நான் அவரை எதிர்ப்பதன் பொருட்டு, பிறன் ஒருவகை என்ஆனக் கற்பனே செய்து கொண்டு என் காலத்தை வீணடித்தேன். இத்தகைய கருத்து வேறு பாடுகள்பற்றி, எமர்ஸனுடைய நாட்குறிப்பில் அதிகக் குறிப்புக்கள் காணப்பெற்ருலும் பொதுவாக அவற்றில் ஒரு பரிவு காணப்பட்டதுடன், கோபத்தைவிட இரக்கமே

        • - ? ・ * ・ ・・

-می،* ب... سیاست نوت بسته شده و تا زمانی که ۰ - ۰ - منفی iت "தோரோவை மட்டுமே நான் அறிந்திருப்பின், நல்ல மனிதர்களிடையே கூட்டுறவே முடியாத காரியம் என நினைத் திருப்பேன். உண்மையைப்பற்றிக் கவலேப்படாமல் வெற்றியைப் பெற வேண்டும் என்ற ஒரே கருத்துடன் தான் 118