பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட்ட முடியாமலிருந்தார். தனிமையை விரும்பும் தோரோவும் நகர வாழ்க்கையை விரும்பும் விட்மனும் சந்திப்பதில் ஒரளவு புதுமை இருக்கலாம் என ஆல்காட் எதிர்பார்த்தார். ஆனால், அவர்கள் இருவரும் அதிக அடக்கத்துடன் இருந்து விட்டமையின், இரண்டு அறிவு கள் சந்திப்பதால் ஏற்படும் பொறிகள் ஒன்றும் பறக்க வில்லை. தெருவில் செல்லும் டாம், டிக், ஹேரி ஆகிய அனைவரையும் நேசிக்கும் - தோரோவின் இயல்பை, விட்மன் வெறுத்தார். விட்மன் ஒரு பஸ் வண்டியில், ஒட்டுபவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு ப்ராட்வேயில் முன்னும் பின்னுமாக ஓயாமல் செல்வதிலும், வண்டிகளின் இரைச்சலைக் கவனிப்பதிலும், இந்தக் கூச்சலின் இடையே ஹோமரை உரக்கப் பாடுவதிலும் இன்பம் காண்பதாகக் * கூறியதைக் கேட்டதும் அவரை வினுேதமானவர் ?? என்று கருதினர் தோரோ. தன்னிலும் முற்றும் மாறுபட்ட ஒருவரை ஹென்றி இது வரைச் சந்தித்ததில்லே. முன் பின் காணுததும், பதப்படுத்தப்படாததுமான ஒரு பெருஞ் சக்தியை விட்மனிடம் கண்டு, முதலில் வெறுப்படைந் தாலும் பின்னர் அதனலேயே ஒரு கிளர்ச்சியடைந்தார். "புல்லின் இலைகள் :: என்ற நூலே மறுபடியும் இரண்டாம் முறையாகப் படித்த தோரோ பல்லாண்டுகளாக நான் படித்த அனைத்தையுங் காட்டிலும் இது நன்மை புரிந்தது - என்று எழுதினர். அக் கவிதைகள் அடிப்படையான உணர்ச்சிகளே நேர்மையுடன் கூறுவதைக் கண்ட தோரோ விட்மனும், தம்மை போலவே, கலப்பற்ற அடிப்படையான ஆதாரங்களில் இன்பம் காண்பதை உணர்ந்தார். 1856ஆம் ஆண்டில், இயற்கை ஆராய்ச்சியிலிருந்து, திகழ் காலப் பிரச்னைகட்கு, நியூயார்க்கும் விட்மனும் தோரோவை இழுத்து வந்தனர். 1850ஆம் ஆண்டு, தப்பி ஓடும் அடிமைகள் பற்றிய சட்டத்தால் ஏற்பட்ட கிளர்ச்சியால், மெஸ்சூஸிட்ஸில் அடிமைகள் என்ற நூலே எழுதி முடித்த பிறகு அந்த உணர்ச்சி ஆய்ந்து விட்டது. தம்மையே பாதிக்கும் நிலைமை ஏற்பட்ட பொழுதெல்லாம் அடிமை எதிர்ப்பை ஆதரித்தார். அத்தகைய சந்தர்ப்பங் களில், பேச்சு மூலம் அடிமை வியாபாரத்தை வலுவாகக் கண்டிப்பதுடன் நிறுத் திக் கொண்டு அதற்காக முறைப்படி கிளர்ச்சி நடத்தும் பொறுப்பை ஃப். பி. லேன்பார்ன் 120