பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணுக்கள் இல்லாமற் போகவில்லை - என்றும் கூறினர். "அடிமைகள் வைத்திருக்கும் பழக்கத்தை எதிர்த்து விடாப் பிடியாகவும், பெரும்பான்மை வெற்றியுடனும் இம் மனிதர் நிகழ்த்திய போராட்டம்,... ... புகழின்றி மாய்ந்து விடும் என்று நினைக்கிறீர்களா ?- என்று அவர் கேட்டது மட்டும் தீர்க்கதரிசனமாக அமைந்து விட்டது. புகழின்றி அது மாயவில்லை. எந்தத் தெற்குப் பகுதியை ஜான் ப்ரெளன் தாம் ஒருவராக நின்று எதிர்த்தாரோ, அந்தப் பகுதியின் மேல் படை எடுப்பதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து வட பகுதிப் படைகள் தயாராகிக் கீழ்க்கண்ட கருத்துள்ள பாடலைப் பாடத் தொடங்கின : "ஜான் ப்ரெளனின் சடலம் சவக் குழியில் வாடலாம் ஆல்ை அவருடைய ஆன்மா படைகொண்டு - (செல்கிறது.* ஜானின் ஆன்மாவைப் பற்றியே தோரோ மிகவும் கவலே கொண்டார். அதே சொற்பொழிவை சில நாட் கழித்து பாஸ்டன், வொர்செஸ்டர் என்ற இடங்களிற் பேசிய துடன் ஒரு மாதங் கழித்துக் காங்க்கார்டிலும் பேசினர். இந்த உணர்ச்சி வெடிப்பு அடங்கிய பிறகு தோரோ மறுபடியும் இயற்கையினிடமே தம் கவனத்தைச் செலுத்திப் பிற நிகழ்ச்சிகள் தம் போக்கில் நடைபெறுமாறு விட்டு விட்டார். ஹார்ப்பர்ஸ் பர்ரியில், ப்ரெளன் நிகழ்த்திய செயல்களின் அரசியற் பயன்கள் எதுவாக இருப்பினும், அவைபற்றி அவர் கவலைப்படவில்லை. இரண்டு ஆண்டுகட்டுப் பிறகு, வடபகுதியில் உள்ளவர்கள், ப்ரெள&னப் பெரிய வீரராக்கி, அவர் உயிருடன் இருந்தபொழுது எவற்றையெல்லாம் விரும் பினுரோ, அவற்றையெல்லாம் செய்தாலும், தோரோ அவை பற்றிக் கவலேப் படவில்லை. தென்பகுதி முழுவதை யும் ஒற்றையாக எதிர்த்து நின்ற ப்ரெளனின் நினேவின் எதிரே, இம் மாகாணங்கள் ஒன்றுடன் ஒன்று போரிட்டது மிகவும் மனச் சோர்வைத் தந்தது. - ※ 岑 * * தோரோ என்றுமே வலுவான வரல்லர். ஹார்வார்டில் படித்த காலத்திலேயேகூட, அவர் பிராங்கைட்டிஸ்? 123