பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோயால் பீடிக்கப் பெற்று, மூன்று மாதங்கள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே தங்கினர். இதன் பயனுக வாழ் நாள் முழுவதும் அடிக்கடித் தொல்லேப் பட்டார். அடிக்கடி சளிப் பிடித்தாலும், உடல் வலுக் குறைவைச் சட்டை செய்யக் கூடாது என அவர் நம்பினுர். மோசமான உடல் நிலையோடு, பருவத்தின் தட்ப வெப்பச் சீர்கேட்டைக் கவனியாமல் பிடிவாதமாக வெளியே உலாவி வந்தார். 1855 இல் ஏற்பட்ட அவருடைய நோய், இரண்டு ஆண்டு களில் அவருடைய வன்மையை மிகவும் குறைத்துவிட்டது. இதனை வெளிப்படையாக ஒத்துக் கொள்வதற்கு அவர் எவ்வளவு மறுத் தாலும், உண்மையில் பெரிதும் கவலை அடைந்தார். என்ருலும், மறுபடியும் உடல்நிலை தேறி 1857 முதல் 1860 வரை நடத்தல், ஏறுதல், அளவிடல், எழுது தல், சொற்பொழிவாற்றுதல், என்பவற்றில் முன்போலவே உழைத்து வந்தார். 1860 இல் அவருடைய நாற்பத்து மூன்ருவது ஆண்டு நடைபெறுகையில் பொதுவாகவும், சிறப்பாக அவர் ஜான் ப்ரெளனே ஆதரித்துப் பேசிய பொழுதும், உயர்வின் சிகரத்தைப் பிடித்துவிட்டார் என்றே அவருடைய நண்பர்கள் கருதினர். எழுத்தாளர், பேச் சாளர் என்ற துறைகளில் அவருடைய புகழ் ஓங்கியது. இயற்கையைப்பற்றி அவர் தயாரித்திருந்த குறிப்புக்களே நன்கு அறிந்தவர்கள், இயற்கை வரலாறு பற்றிய ஒரு சிறந்த நூல் அவரிடமிருந்து தோன்றப் போகிறதென்றே எதிர்பார்த்தனர். ஒரு குறிப்பிட்ட தலைப்பைப்பற்றி எவ் வளவுக் கெவ்வளவு சிந்தித்து எழுதுகிறமோ, அவ்வளவுக் கவ்வளவு அதிகமாக எழுத முடியும். சிந்தனை சிந்தனையை வளர்க்கிறது. அதன் பயனுக அது எழுத்தில் வளர்ச்சி யடைகிறது?’ என்று 1860 இல் எழுதினர். ஒரு சாதாரண மனிதன் எழுதுகிற உலக வரலாற்றைக் காட்டிலும், மாமேதை தான் எழுதும் ஒர் ஊரினுடைய மாதா தேரழி இன் வரலாற்றைக்கூடச் சுவையுடை பதாகச் செய்து விடுவான். அத்தகைய மாமேதைத் தன்மை தம் மிடம் இருக்கிறதென்று அவர் நம்பி இருக்கலாம். ஊத்தப் பிராந்தியத்தின் இயற்கை வரலாறுபற்றிய குறிப்புக்கள் ஒருபுறம் இருக்க, சிவப்பு இந்தியர்கள்பற்றியும் பத்து லட்சம் சொற்கள் கொண்ட குறிப்பை வைத்திருந்தார். இவற்றிற்குங்கூட ஒரு நாள் நூல் வடிவு தர வேண்டும் ; 124