பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனலும் அதற்கு அவசரம் ஒன்றுமில்லை. தம்முடைய உடல் வன்மையில், என்றும்போலவே ஒரு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார். இன்னும் நாற்பது ஆண்டுகட்குக் தம் வாழ்க்கைக்கு எவ்வித முடிவும் இல்ல்ே எனத் தம் நண்பர் ஒருவரிடம் கூறினர். 1860ஆம் ஆண்டு, அதிகக் குளிரும் ஈரமும் நிறைந்த நவம்பர் மாதத்தில், மார்புச் சளியால் தோரோ தாக்கப் பெற்ருர். அது அவருடைய நுரை ஈரலேயும் தாக்கிற்று. அந்தக் குளிர்ப் பருவம் முழுவதும், அவர் தம்முடைய கிராமத்தைச் விட்டு வெளியேறவே இல்லே. 1861 ஆம் ஆண்டு இளவேனிற் பருவத்தில், அவர் மிகவும் இளேத்துப் போயிருந்தார். மே மாதத்தில் ஹோராஸ் மான் என்ற தாவர இயல் நண்பருடன் வடமேற்கு நோக்கிப் புறப் பட்டார். அப்பகுதியில் உள்ள மின்னஸோடோவில் காணப் பெறும் வறண்ட சீதோஷ்ணத்தில் உடல் வலிமை பெறவும், லியாக்ஸ் என்ற புராதனச் சிவப்பு இந்தியர்களைக் காணவுமே அவர் போளுர் , ஆளுல், ஒரு நோயாளி மேற் கொள்ளக் கூடாத அவ்வளவு நீண்ட பயணமாகும் அது. ரயிலிலும், வண்டிகளிலும், ஆற்றுப் படகிலும் ஆக எட்டு வாரங்கள் பிரயாணம் செய்தார். அவர் விரும்பிய சிவப்பு இந்தியர்களையும், நையாக்ரா, மேல் மிஸிஸிபி, புதிய தாவ ரங்கள், விளுேதமான பறவைகள் ஆகியவற்றை யெல்லாம் கண்டாலும், இளமை அவரை விட்டுப் போய்விட்டது. எவ்ளளவு நோயுடன் புறப்பட்டாரோ, அவ்வளவு நோயு, டன் மீட்டும் இல்லம் வந்தடைந்தார். அவருடைய தந்தை யார் மூன்ருண்டுகள் முன்னரே இறந்து போனுலும், தாயாரும், ஸோபையாவும் அவருக்குச் செவிலிப் பணி புரிந்தனர். அந்த ஆண்டுக் குளிர்ப் பருவம் வந்தவுடன், தமக்குத் தோன்றியுள்ள ஆபத்தான நோயின் இயல்பை அறிந்து, அதை அமைதியுடன் ஏற்றுக் கொண்டார். தம். எஞ்சிய நாட்களில், வாழ்க்கையிலிருந்து எவ்வளவு மகிழ்ச்சி யைப் பெறக்கூடுமோ அவ்வளவையும் பெற்றுவிட முடிவு செய்து கொண்டார். அவருடைய ஆயுளின் இறுதி ஆறு மாதங்களும் தனிமையிலோ, வீணுகவோ கழிக்கப்பட வில்லை. பலர் அவரைக் காண வந்தனர்; லோபையாவின் உதவியுடன், அட்லான்டிக் மாத இதழ்க்காரர்கள் 125