பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேட்டிருந்த பல கட்டுரைகட்கு வடிவு கொடுக்கும் பணியில் முனைந்தார். மேற்கோளாகக் காட்டக்கூடியவற்றைக் கூறியுள்ள மனிதர்களில், தலைமை இடத்தைப் பெறக்கூடிய தோரோ, இறுதிவரை அப்படியே இருந்தார். அவருடைய சுதந்திர மான வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அவருடைய கூற்றுக் கள் பல இன்று மிகவும் பிரசித்தி பெற்று விட்டன. மரணத் தின் பின் அவருடைய வாழ்வு வளமாக இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்ட பழைய நண்பர் ஒருவரை நோக்கி, *நண்பரே ! ஒரு நேரத்தில் ஒர் உலகைப்பற்றிமட்டுமே கவலைப்பட வேண்டும்’ என்ருர். ஆண்டவனிடம் அவர் சமாதானம் செய்து கொண்டாரா என்று கவலைப்பட்ட அத்தை மரியாவை நோக்கி, தாம் ஆண்டவனிடம் என்றுமே சண்டையிட்டுக் கொண்டதில்லை என்று விடை இறுத் தார். கிராமச் சிறைச்சாலைக் காவற்காரராகிய ஸேம் ஸ்டேபில்ஸ், ஒரு முறை தோரோவைச் சிறையிட்டு, ஓர் இரவு அவருடைய உறக்கத்தை ஒழித்தமையால், மிகச் சிறந்த கட்டுரைகள் சில பிறப்பதற்குக் காரணமாக இருந் தவர். அவர் தோரோவைச் சந்தித்து விட்டு மீளும் பொழுது இவ்வளவு மகிழ்ச்சியோடும் அமைதியோடும் இறந்து கொண்டிருக்கின்ற ஒருவரைத் - தாம் இது வரைக் கண்டதில்லே என்று கூறினர். குளிர் காலம் முடியும் வரை உயிரைப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தார் ; வசந்த காலத்தின் உச்சியில், 1862 மே மாதம் 6ஆம் தேதி தோரோ உயிர் நீத்தார். இறுதியாக அவர் புலம்பிய சொற்கள் மூஸ்'(ஒருவகை மான்), இந்தியன்’ என்பவையாகும். காங்க்கார்டிலுள்ள புதிய இடுகாட்டில் அவர் புதைக்கப் பட்டார். இறுதிச் சடங்கின்போது, இருபத்தைந்து ஆண்டு கட்கு முன்னர் எழுதி, ல்யூக ரெளனின் பல்கன் வழி யாக எந்தக் கவிதையைத் தோரோ எறிந்தாரோ, அதே கவிதையை ஆல்காட் படித்தார். எமர்ஸன் உணர்ச்சி மிகுந்த ஒர் உரை நிகழ்த்தினர். . அவ்வுரையை விரிவு 126