பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவருடைய நிலையான விருப்பம் இயற்கை வாதத்திலேயே அமைந்திருந்தது. இயற்கையைப் பரப்புகின்றவர்கள் கில்பர்வைட்டைப் போலவே தோரோவுக்கும் மிகவும் கடமைப்பட்டுள்ளனர். 1900 வாக்கில், பிரிட்டனில் டபிள்யூ. எச். ஹட்ஸன் இந்த மரபை ஒட்டியே இயற்கையைப்பற்றி எழுதத் தொடங்கிலுைம், உள்ளதை உள்ளவாறும், அழகாகவும் எழுதினரே தவிர, அந்த எழுத்தில் உணர்ச்சி எதுவும் இல்லை. அமெரிக்காவில் இருந்த இயற்கை எழுத்தாள ராகிய ஜான் பர்ரொஸ், தம் வாழ்நாளின் கடைசிக் காலத் தில், நம் அனைவருடைய எண்ணத்தையும் வெளியிடுபவர் போலக் கீழ்க்கண்டவாறு எழுதினர் . ஒரே ஒரு தோரோ தான் இருக்க முடியும். அவர் போன்ற ஓர் ஒப்பற்ற பரி சிலே நமக்கு வழங்கியதற்காக ந்யூ இங்கிலாந்தின் தெய்வங் கட்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். தோரோவின் இயல்பில் ஒரு சிறு அளவாவது எனக்கு இருக்கக் கூடாதா என்று விரும்புகிறேன். மிக உயர்ந்த அறநிலையும், உயர்ந்த மனநிலையும் அவருடைய பண்புகளாகும். மாபெரும் இலக்கியத் தரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிற அவருடைய தரத்தை எட்டிப் பிடிக்கும் சக்தி என்பால் او و هات sb2 لاتی பல்வேறு காரணங்கட்காகப் பல்வேறு ரசிகர்களும் தோரோவைப் போற்றுகிருர்கள் எனினும், இயற்கையோடு நெருங்கிய தொடர்புகொண்டு வாழவேண்டும் என்று எடுத்துக் கூறியவர் அவர் என்பதற்காகவே பலரும் அவரைக் கொண்டாடுவர். இக்கருத்தை, வால்டனில் வாழும்பொழுது அவர் கூறியதைவிடச் சிறப்பாகப் பிறர் கூறவியலாது. "நம் கிராமங்களேச் சுற்றி, இன்னும் நன்கு ஆராயப்படாத, காடுகளும் புல்வெளிகளும் இருப்பதால் தான் கிராம வாழ்க்கையில் தேக்கம் காணுமல் இருக்கிறது. காடுகளாகிய வலுவேற்றும் மருந்துகள் நமக்கு மிகவும் தேவை. சதுப்பு நிலப் பறவையாகிய பிட்டர்னும், நீர்க் கோழியும் நிறைந்து நிற்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டும். நீண்ட அலகுகளேயுடைய உள்ளான் பறவை யின் கனமான குரலேக் கேட்கவும், பழக்கப்படாததும், தனியே வாழ்வதுமான கோழி இனப் பறவை கூடு கட்டி 130