பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யுள்ள செட்ஜ் புல்லே முகர்ந்து பார்க்கவும், வயிறு தரையில் தொடும்படி ஊர்ந்து செல்லும் மினுக்கையும் காண முடியும். எல்லாப் பொருள்களையும் கண்டு பிடித்து அவற்றின் தன் மைகளே அறிய விரும்புகிருேம். அவ்வாறு செய்ய வேண்டு மாயின் எல்லாப் பொருள்களும் மறைவுடையனவாய், காண முடியாதவையாய், நிலமும் கடலும் அளக்கலாகப் பரிமாணமும், ஆழமும் உடையனவாய் இருத்தல்வேண்டும். இயற்கையை, நாம், முற்றிலும் அறியவே முடியாது. எனவே இயற்கையின் மடியிலேயே, வசந்த காலத் தில், அவருக்கு மிகவும் விருப்பமான குட்டையின் பக் கத்தில் அவரை விட்டு விடுவோம் : ஆ வசந்த காலத் தில் பல நாட்கள், விடியற் காலத்திலேயே, நான் இந்தப் புல்வெளிக்கு, வந்துள்ளேன். ஒரு சிறு பாறையிலிருந்து மற்ருெரு சிறு பாறைக்கும், ஒரு மரத்தின் வேரிலிருந்து பிறிதொரு வேருக்குமாகத் தாண்டித் தாண்டிச் சென்றுள் ளேன். அந்த நேரங்களில் ஆற்றின் பள்ளத் தாக்கும், காடும், துய்மையான, இறந்தவர்களையும் எழுப்பக்கூடிய, பேரொளி யில் மூழ்கியிருக்கும். சிலர் நினைப்பதுபோல், கல்லறைகளில் மக்கள் உறங்குவதானல், அவர்கள் இந்த ஒளியில் விழித் தெழுவர். மரணமிலாப் பெரு வாழ்விற்கு வேறு வலுவான சான்று வேண்டா. எல்லாப் பொருள்களும் இத்தகைய ஒளியில் தான் வாழ வேண்டும்.-- 131