பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பதிலேயே செலவழித்தார். ஹார்வார்டை அவர் விட்டுவருங் காலத்தில், அவரை எந்தப் பாடங்களில் சோதனை செய்தார்களோ அவற்றைவிட, மேலே கூறிய இரண்டு துறைகளிலும் மிகுதியாகக் கற்றிருந்தார். சலியா மல் நூல்கள் படிப்பதில் வாழ்நாள் முழுவதும் அவர் ஈடுபட் டிருந்தமையின், ஹார்வார்டு நூலகத்திலிருந்து இறுதிவரை நூல்களேக் கடன் வாங்கிக் கற்று வந்தார். - கவலையில்லாத பள்ளிப் பிள்ளையாக ஹார்வார்டுக்குள் தோரோ நுழைந்தார் எனினும், குழப்பமும் கவலேயும் நிறைந்த இளைஞராக வெளி வந்தார். ஹார்வார்டில் அவ ருடைய புற வாழ்க்கை நிகழ்ச்சிகள் பற்றி நமக்கு ஒரு சிலவே தெரிய வருகின்றன ; ஆனல் அவருடைய அக வாழ்க்கை பற்றி ஒன்றுமே தெரியாது. மேலாகப் பார்க்கும் பொழுது, அவருடைய கல்லூரி வாழ்க்கையில் ஒன்றும் சுவை இருந்ததாகத் தெரியவில்லை. கல்லூரியின் சமுதாய வாழ்க்கையில் அவருக்கு எவ்விதப் பற்றுதலும் ஏற்பட வில்லை. ஹார்வார்டில் அவரை அறிந்த மாணவர்கள் முரண் பட்ட கருத்துக்களே வெளியிடுகின்றனர்; அவரைப்பற்றி அவருடன் ஒரு சாலை மாணவராக இருந்த ஜான் வெய்ஸ் என்பவர் எழுதியுள்ளதுதான் கூடுமானவரை உண்மை யானதாகவும், விரும்பத் தகுந்ததாகவும் இருக்கிறது. எவ் வித உணர்ச்சியையும் காட்டாத தோரோவின் நடத்தையி லிருந்து, பின்னர் வெளிவரப் போகும் ஒரு மாமேதையின் இயல்புகளே நாங்கள் அறியவே இல்லை. அவருடைய சொந்த ரசஞானத்தைப்பற்றி எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. பழைய ஆங்கில இலக்கியங்களில் மிகவும் ஈடுபட் டிருந்தார் என்று மட்டும், வேண்டுமானல், குறிப்பிடலாம். கோவர், சாஸர் முதலானவர்களிலிருந்து எலிஸபெத் காலம் வரையுள்ள கவிதைகளில் பல தொகுதிகளே அவர் சேகரித்து வைத்திருந்தார். இந்தச் சுரங்கத்தில் அவர் அமைதியான உற்சாகத்தோடு உழைத்து வந்தார்... ... ... பிறரைப்பற்றி அவர் கவலைப்படவே இல்லை ; சக மாணவர் கள் கூட, அவரிடம் பழகாமல் மிகவும் தொலைவில் இருப் பவர்கள்போல் தோன்றினர். இத்தகைய ஒரு கனவுலகம் அவரைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது. ஆனல் அவருடைய வீட்டார்கள் அவருக்குத் தைத்து அனுப்பிய வினுேதமான சட்டைகள், தொள தொள என்று தொங்கிக் கொண்டிருந் 10