பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ததுபோல் இக் கனவுலகம் தொங்கிக் கொண்டிருக்க வில்லை. சிந்தனைக் குறிகள் அவர் முகத்தில் தோன்ற வில்லே. முகம் ஆழ்ந்த மனநிலையைக் காட்டிற்று எனி லும், மதமதப்புடன் ஏதோ பெரு முயற்சியில் ஈடுபட்டிருப் பதுபோல் காணப் பெற்றது... ... ஆல்ை சில சமயங்களில் ஏதோ ஒன்றைத் தொலேத்துவிட்டுத் தேடுபவர் போல வம், ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருப்பவர் போலவும், அவ ருடைய கண்களில் ஒர் ஒளி வீசியது ; அவ்வொளி இயற்கையின் சொந்தக் குழந்தை, இயற்கையின் வழிவழி இரகசியங்களே அறிந்துகொள்ள முயல்வது போல் தோன்றி .யது. பொறுமைக் குறைவான பிறர், கூர்ந்து நோக்கியும் காண முடியாதவற்றை, அவருடைய கூர்ந்து நோக்கும் கண்கள் கண்டன ; படைப்பில் உள்ள சேதன, அசேதனப் பொருள்களின் நுண்மையான இயல்புகளே அக்கண்கள் கண்டமையின், அவை அவருடைய நூல்களில் இடம் பெற்றன. சாதாரணத் தரைமீது கூடப் பிறர் காணுத வற்றை எல்லாம் அவர் காண முடிந்தது... ... ஆகவே என் போன்றவர்களுடன் சேராமல் கல்லூரியில் அவர் தனியே இருந்ததில் வியப்பு ஒன்றுமில்லை; அக்காலத்திலேயே அவர் கற்பனையில் கண்ட ஏதோ ஒரு வால்டன் குட்டை :யின் கரையில் தற்காலிகமாக ஒரு குடிசை அமைத்துக் கொண்டு அதில் வாழ்ந்தார் போலும்... ...?? என்று ஜான் வெய்ஸ் எழுதியுள்ளார். - ஹென்றியின் மனம் இப்பொழுது நன்கு விழித்துக் கொண்டது. பிற்காலத்தில் உரைநடை எழுத்தாளராக விளங்கப்போகும் இவர், ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த பகுதிகளே எல்லாம் சுவைத்துக் கொண்டு, கவிதை எழுதும் அலுவலில் ஈடுபட்டிருந்தார். பிற்காலத்தில் சமு” தாயத்தின் திறய்ைவாளராகத் தோன்றப்போகும் ஹென்றி, இப்பொழுதே ஹார்வார்டில் உள்ள சக மாணவர்கள் சில ரைத் திறனுய்வு செய்து வந்தார். விடுமுறைக் காலங்களில், காங்க்கார்டில், ரால்ஃப் வால்டோ எமர்ஸனுடன் உரை யாடிக் கொண்டிருக்கையில் ஹார்வார்டு சமுதாயத்தைப் பற்ற, ஹென்றி, நகைச்சுவையோடும் சூட்டோடும் .நிய வற்றைக் கேட்ட எமர்ஸன், இவருடைய கல்லூரி வாழ்க்கையைப்பற்றி ஒரு நூல் எழுதுமாறு வேண்டினுர். ஆளுல் இந்த வேண்டுதலின்படி ஹென்றி நடக்கவில்லை. İl.