பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 2 "எதிர்பாராதது என்னும் கயிற்றில்ை கட்டப்பெற்ற பயனற்ற முயற்சிகள் என்னும் மூட்டையாவேன் நான்' --தோரோ. ஹார்வார்டு பல்கலைக் கழகம் தோரோவை, அக்காலப் பண்புக்கு ஏற்ப, ஒரு படிப்பாளியாக மட்டும் ஆக்காமல் அதற்கும் மேற்பட்ட ஒர் எழுத்தாளராகவும் செய்தது. ந்யூ இங்கிலாந்தில் தோன்றிய புத்துணர்ச்சி’யின் தலைவர் களாக விளங்கப்போகும் எமர்ஸன், ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் போன்றவர்களின் ஆசிரியராகிய, சொல்லலங் காரப் பேராசிரியர் எட்வர்ட் டி. சேனிங் என்பவரிடந்தான் ஹென்றியும் பயின்ருர். இவரிடம் பயின்றதனால், ஒழுங்கு முறைக்கும், தர்க்கத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கக் கூடிய ஒரு நடையை ஹென்றி கற்ருர். மாணவர்களுடைய கருத்துக்கள், முழுவதும் திறய்ைவு செய்யப் பெற்றன. கல் லூரியில் தாம் எழுதிய கட்டுரைகளைத் தோரோ காப்பாற்றி வைத் திருந்தார். அக் கட்டுரைகளின் தலைப்புக்களைப் பார்த்தால், எவ்வளவு உயர்ந்த நெறி முறையில் சொல்ல லங்கார வகுப்புக்கள் நடைபெற்றன என்று அறிய முடி கிறது. மனிதப் பண்பின் ஆழ்ந்த ஒரு பகுதிபற்றி, செம் மையான சொற்களால், அடிக்கடிக் கட்டுரை வரைதல் என்பது வெறுப்பையும் தொல்லையையும் தருகின்ற ஓர் அலு வலாகும். எனவே, பிற மாணவர்களைப் போலவே ஹென் றியும் செயற்கையான, உப்புச் சப்பற்ற கட்டுரைகளை வரைந்து தள்ளிஞர். நாம் முன்னே கூறியபடி, வாழ்க்கை யின் மிக இளமைப் பருவத்திலேயே சமுதாயத்தின் திற ய்ைவாளராக அவர் ஆனர். ஹார்வார்டில் தோரோ தங்கியிருந்த முதல் ஆண்டிலேயே அவரைப்பற்றி எமர் ஸ்ன் தம் நாட்குறிப்பில் கீழ்வருமாறு எழுதினர்: “அந்தப் பிள்ளே கூறுவனவற்றைக் கேட்டுச் சமுதாயம் மகிழ்ச்சியு டன் சிரிக்கின்றது. ஆனுல் அவர் கூற்றிலுள்ள கருத்துக் களேவிட ஆழ்ந்த உண்மைகள் இருக்க முடியாது. ஆனல் ஹார்வார்டின் எல்லேக்குள் இருக்கும்வரை அந்தப் 13