பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளே தனக்குள் தானே அடங்கி இருந்தார்; எனினும் ஒரு முறை மட்டும் அவருடைய மனம் விட்டுப் பேசியுள் ளார். நகரத்தில் வாழும் மக்களைவிடச் சிவப்பிந்தியன் மனிதத் தன்மையுடையவன். மனிதனுக வாழ்ந்து, மனித கைச் சிந்தித்து, மனிதனுகவே இறக்கிருன் ... ... கல்வி கற் றல் என்பது கலைத் திறமையின் கைப்பாவை எனினும் மணி தன் முழுத்தன்மை அடைய அது தேவை இல்லை; அதனல் அறிவைப் பயிற்றுவிக்க முடியாது... ... இவ் வார்த்தை களைக் கேட்ட ஆசிரியர்கள் வியப்பில் ஆழ்த்திருப்பார்கள் என்று நாம் ஊகித்துக்கொள்ளலாம். ஆளுல் இவ்வாறு கல்லூரி வாழ்க்கையில் அவர் பேசிய சந்தர்ப்பங்கள் மிக வும் குறைவே; உள்ளத்தில் தோன்றிய இந்தப் புரட்சிப் புயலுக்குத் தம் இளமைக் காலம் முழுவதும் ஹென்றி வலு வான மூடி போட்டிருந்தார். ஹார்வார்டில், வாழ்ந்த காலம் முழுவதையும், தோரோ ஆழ்ந்த சிந்தனையில் கழித்தார். அவருடைய தலைமுறையில் வாழ்ந்த இளைஞர்களேத் தட்டி எழுப்பக்கூடிய புதிய கருத் துக்கள் அக்காலத்திலேயே நடமாடத்தொடங்கின. இங்கி லாந்தில் ராபர்ட் ஒவன் தம் புகழின் உச்சியில் திகழ்ந் தார். அவரும், ந்யூ இங்கிலாந்தில் ஏராளமாக விருந்த அவரைப் பின்பற்றுபவர்களும், புதுமையான ஒரு சோஷ லிஸ் சமுதாயம் உடனடியாகப் பிறக்கப் போகிறதென்று நம்பிஞர்கள். என்ருலும், இந்தப் பெரு மாற்றம், எந்த வழியில் பிறக்கப் போகிறது என்பதைப் பற்றி அவர்களுக் குள் கருத்து ஒற்றுமை சிறிதும் இல்லே. கற்பனைக்கு இடங் கொடாமல், வாழ்க்கையோடு ஒட்டி வாழ்ந்த சிந்தனையா ார் பலரும், தொழிலாளர் சமுதாயம், நெறியான முறையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொழுதுதான் இம் மாறுதல் ஏற்படும் எனக் கருதிஞர்கள். புரட்சி வேண்டும் தொழிற் சங்கத்தினர், பட்டயக்காரர்கள், டோல்படில் தியாகிகள் முதலியோரின் காலம் அது... ...கோல்ரிட்ஜ், வொர்ட்ஸ் வொர்த், என்பவர்களுடைய ரொமான்டிஸிஸ்-க் கவி தைகள் இன்னும் ஆட்சி செலுத்திக்கொண்டிருந்த காலம் அது. கோல்ரிட்ஜ், ஸ்காட், பைரன், ஷெல்லி, கீட்ஸ் என்பவர்கள் இறந்துவிட்ட போதிலும், அவர்களுடைய செல்வாக்கு, இங்கிலாந்தைப் போலவே அமெரிக்காவிலும் மிகுதியாகப் பரவி இருந்தது. தொழில் நகரங்கள், தொழில் 14