பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ச்சி என்பவற்ருல் ஏற்பட்ட சமுதாயப் பிரச்னைகள் காரணமாக, இசைக் கவிதை, ரொமான்டிஸிஸ்ம், என்பவை நடைமுறைக்கு ஒத்த எண்ணங்களால் சிறிது சிறிதாக விலக்கப் பெற்றது. அறிவாளிகள் அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே ஓயாமல் சென்று வந்தமை யின், தேனிக்கள் தேனுணவைக் கூட்டுக்கு எடுத்துச் செல் வதுபோலப் புதிய கருத்துக்களே இங்குமங்கும் கொண்டு சென்றனர். பிரெஞ்சு நாட்டிலிருந்து ஷாடோப்ரியான், ஹ்யூகோ என்பவர்களுடைய ரொமான்டிஸிஸ்க் கருத்துக் களே மட்டும் அல்லாமல், சார்ல்ஸ் ஃப்ஹார்யெர் என்பவரு டைய குறிக்கோள்த் தன்மை பெற்ற சோஷலிஸத்தையும் கொண்டுவந்தனர். இதன் பயனுக, ந்யூ இங்கிலாந்தில் ஃப்ஹார்யெரைப் பின்பற்றுபவர்கள் தோன்றினர். இவர் கள் தொழிலாளர் இயக்கம் பற்றிக் கவலைப்படாமல் தன்னி றைவு கொண்ட சமுதாயம் எளிய வாழ்வு நடத்தும் மக்க ளேக் கொண்ட சமுதாயம் என்பவற்றை நிறுவுவதன்மூலம் சோஷலிஸத்தை உடனடியாகக் கொண்டுவர விழைந்தனர். ஜெர்மனியிலிருந்து தத்துவக் கருத்துக்கள் வந்தன. சில: ந்யூ இங்கிலாந்துவாசிகள், ஐரோப்பியச் சிந்தனைகள் மூல மாக அந்த எல்லையையும் கடந்து, கீழ்நாட்டு மெய்யுணர்வு [576bs&ituţih (Mystical writings) di basģ; Ggru–IẾists.orf. - இதன் பயனுக, ந்யூ இங்கிலாந்தின் மனம் விரிவடைந்: தது; புதிய கற்பனேகள் மலர்ந்தன ; மென்மையான இள மனங்கள் புதிய கருத்துக்களை வரவேற்றன. ஏனென்ருல், கார்லேலின் தூண்டுதலுக்கு இலக்கானவர்கள் பாஸ்டன் நகர வியாபாரிகள் அல்லர். ஹார்வார்டில் ஒரு கல்லூரியை. நிலைநிறுத்திக் காப்பாற்றிவர அவர்கள் விருப்பத்துடன் பணம் உதவினர்கள் என்பது உண்மைதான். எனினும் அமெரிக்காவின் அறிவுக் களஞ்சியமாக இருந்த அந்தக் கல்லூரி, வெளிநாட்டுப் புதுமைக் கருத்துக்களேயே தானும் மேற்கொள்ளத் தொடங்கியபொழுது, அந்த வியாபாரிகள், தாங்கள் முதலீடுசெய்த பணம் தவருன வழிகளில் செலவா கின்றதோ என ஐயமுற்றனர். என்ருலும், நாளாவட்டத் தில், பிறநாட்டு வாணிகமும், கடல்வழி வந்து போகின்ற, மக்களோடு தொடர்பும் பாஸ்டன் மக்களிடையே ξύ ύi, θα சர்வதேசத் தன்மையைப் புகுத்தியது. புதிய பண்பாட்டி லும், அழகிலும் அவர்கள் கொண்டிருந்த வெறுப்பையும், 15