பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்ப்பையும் இச் சூழ்நிலை மாற்றிவிட்டது. ஆகவே, அமெரிக்காவின் அறிவுலக வாழ்க்கையின் மையமாக பாஸ் டன் நகரம் அமைந்தது. ஐரோப்பியர்கள்கூட, எடின்பரோ, பாரீஸ், பாஸ்டன் என்று ஒரே மூச்சில் பேசத்தொடங்கிய நேரத்தில் ந்யூ இங்கிலாந்தில் சிறந்த எழுத்தாளர் சிலர் தோன்றினர். ஹென்றி வோட்ஸ்வொர்த் லாங்க்ஃபெ. லோ தம்முடைய முப்பதாவது வயதிலேயே பிறமொழிப் பேராசிரியராக இருந்தும் தம் கவிதைகளால் பெயர் பெற் ருர். அந்த நேரத்தில் தோரோ ஹார்வார்டில் மாணுக்க ராக இருந்தார். 1820-1830 ஆண்டுகளில் ஹர்வார்டில் பயின்ற ரால்ஃப் வால்டோ எமர்ஸன் இந்த நேரத்தில் தான் இங்கிலாந்து சென்று, கோல்ரிட்ஜ், வோர்ட்ஸ் வொர்த், லேண்டர், டி க்வின்ஸி, கார்லேல் ஆகியவர்களேச் சந்தித்து மீண்டார். சிறந்த கட்டுரையாளர், பேச்சாளர் என்ற நிலையான புகழையும் இப்பொழுது பெற்றுவிட்டார். 1835 க்கு மேற்பட்ட காலம் புரட்சிக்கும், மகிழ்ச்சி மனநிலைக்கும் இடம் தந்த காலம். பரிணும வழியில் புதிய மாதிரியான மனிதன் தோன்றப் போகிருன், அவன் வீரம், தன்னிறைவு, அறிவுடைமை ஆகியவற்ருல் நிறைந்திருப் பான் என்னும் எண்ணம் இளைஞர்களிடையிலாவது உலாவ லாயிற்று. மனித மனம் அதனுடைய வளர்ச்சியில் மேலும் ஒரு புதிய உச்சத்தைப் பெறப்போகும் ஒரு புத்துணர்ச் சியை எமர்ஸன் தம்முடைய சொற்பொழிவுகள் மூலம் வலி யுறுத்திவந்தார். புதியவாகத் தோன்றுகின்ற பல்வேறு கருத்துக்களையும் குறிப்பிடக்கூடிய ஒரே சொல்லக்கான முயன்றும் முடியவில்லை. ந்யூ இங்கிலாந்தில் ஒருவர் 1. புதுமை : என்று பேசுவாரேயானல், ரால்ஃப் வால்டோ எமர்ஸனுடன் தொடர்புடைய, சிக்கலான புதிய தத்துவ சாஸ்திரம் பற்றிப் பேசுகிருர் என மக்கள் அறிந்துகொண்ட னர். ஆகவே 1837 இல் இருபது ஆண்டு நிரம்பப் பெற்ற தோரோ பல்கலைக் கழகப் பட்டத்துடன் கல்லூரியை வி: டுக் காங்க்கார்டில் நுழைந்த தருணம், டிேனுட்டு வளர்ச்சி வரலாத்தில் சாதாரணமான ஒரு தருணமக இருக்கவில்லை. மேலும் அந்த நேரத்தில், அதாவது 183 இல் காங்க்கார் டும் சாதாரன ஒரு கிராமமாக இல்லே. ஏனென்ருல் எமர் ஸ்ன் மூன்று ஆண்டுகளாக அங்கே தான் வசித்துவந்தார். 16