பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறரை வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஆளுமையைப். (Personality) பெற்றிருந்தார் எமர்ஸன். அவருடைய செல்வாக்கு மிகுதியாக இருந்தது. அதிலும் சிறப்பாக, இளைஞர்கள் அவரது செய்தியின் அவசரத்தை உணர்ந்: தனர். அவர்களே நோக்கி, பழைய பழக்க வழக்கச் சுமைகளே ஒதுக்கி எறிந்துவிட்டு அறிவு விடுதலையை யும், தனித்துவத்தையும் நாடி வேகமாக முன்னேற வேண் டும் என்று அவர் கூறிஞர் ; எந்தத் தலைமுறை இளைஞர் களேயும் கவரக் கூடியது எமர்ஸன் விடுத்த செய்தி ; அதி லும் 1830 வாக்கில் வாழ்ந்த உணர்ச்சிமிகுந்த இளைஞர் கட்கு அந்தச் செய்தி துப்பாக்கி மருந்திற்கு நெருப்பு வைத்ததுபோல் ஆயிற்று. பாஸ்டனில் ஒரு மாதா கோவிலில் மத போதகராக இருந்த எமர்ஸன், பின்னர் அந்தப் போதகர் குழுவிலிருந்தே நீங்கி விட்டார். இப். பொழுது சுதந்திரமாக இருப்பதற்குரிய வருமானத்தைப் பெற்றுவிட்டமையின் காங்க்கார்டு கிராமத்துக்கு அருகி லேயே ஓர் அழகிய வீட்டை வாங்கி அதில் குடி புகுந் தார். இந்த இடம் அவர் விருப்பம்போலக் கிராமிய வாழ் வோடும், அதே சமயம் பாஸ்டன், ஹார்வார்ட் ஆகிய இடங்களில் உள்ள அறிவு வட்டாரத்தோடும் தொடர்பு கொள்ளக் கூடிய முறையில் அண்மையிலேயே அமைந் திருந்தது. அவருடைய இளமை வாழ்க்கை துணிவற்ற தாய், துரதிர்ஷ்டம் நிறைந்த தாய் அமைந்திருந்தது. ஹார் வார்டிலும், மாதா கோவிலிலும் பணியாற்றிய பிறகு, ஆசிரியப் பணியை மேற்கொண்டு அதனையும் விட்டுவிட் டார். வறுமையுடன் போராடினர்; எலும்புருக்கி நோயால் அவதிப்பட்டார் : மணஞ் செய்துகொண்டார் எனினும் விரைவிலேயே மனைவியை இழந்தார். வீணுகப்பெற்ற சந்தர்ப்பங்கள் ஒன்றிலிருந்து மற்ருென்றுக்குத் தாவுவ தாகவே இருந்தது அவருடைய வாழ்க்கை. அவரைவிட ஆண்டில் மூத்தவர்கள், அவருடைய அறிவுத் திறனைப் பாராட்டினர். என்ருலும், அவருடைய சொற்பொழிவு களும், கட்டுரைகளும் விளக்கமாக்வும் அழகாகவும் இருப்பி னும் அராஜகத்தையும் நாஸ் திகத்தையும் போதிப்பவை என்றே கருதினர். நல்ல உயரமும், மெலிந்த முகமும், அழகிய நீல நிறக் கண்களும் உடைய எமர்ஸன்தான், ஒர் அறிஞனின் அடக்கமும், ஒரு தீர்க்கதரிசியின் மனத் 2 17