பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திண்மையும் படைத்த எமர்ஸன்தான், தாம் கூற வந்த செய்தியைப் பிறரிடம் ஓயாது கூற விரும்புபவரும், உண் மையை நாடி அலைபவர்களைத் தம் செல்வாக்கினுள் சேர்த் துக்கொள்பவருமாகிய இந்த எமர்ஸன் தான் இளமையுட னிருந்த ஹென்றி தோரோவிடம் காணப்பெற்ற மேதையை வெளிக் கொணர்ந்தவராவர். ஆனல், தோரோவும் எமர்ஸ்தும் தம்முள் காட்டிக் கொண்ட மரியாதையும் மதிப்பும் பரஸ்பரமானவை. கிராமத்தில் பிறந்து வளர்ந்த தோரோவாகிய மாணுக்கனின் ஆழ்ந்த புலமை, அச்சமில்லா நேர்மை, கூர்மையான அறிவு, ஆன்மிகத் திண்மை என்பவற்றை எமர்ஸன் அறிய அதிக நாளாகவில்லை. தம்மிடம் தோரோ காட்டிய மரியாதை யைக் கண்டு எமர்ஸன் மனம் மகிழ்ந்தார்; அவருடைய நகைச்சுவையுடன் கூடிய பேச்சைக் கேட்டு உள மகிழ்ந் தார்; அவருடைய இயற்கை ஈடுபாட்டில் உள்ளத்தைப் பறி கொடுத்தார் ; உள்நாட்டுக் கலைகளில் தோரோவுக் கிருந்த வன்மையையும், இப்பொழுதேகூட வெளிப்ப்டத் தொடங்கிய அவருடைய புலமையையும் கண்டு மிகவும் ஈடுபட்டார். இந்த ஆசிரியரிடமிருந்து ஹென்றி மிகவும் நிரம்பக் கற்றுக் கொண்டதுடன் ஆசிரியரான எமர்ஸ் னுக்கு வயல் வெளிகளில் வேலை செய்யும் முறைகளைக் கற் றும் கொடுத்தார். - - மிகவும் ஆண்மையுடன் விளங்கிய ஒரு சமுதாயத்தின் எண்ணங்களே அறிவதற்குரிய கருவியாக இருந்தது என்பதுபோகக் கிரேக்க மொழியில் வேறு எவ்விதச் சிறப் பையும், தோரோ உணரவில்லை. உயிரோட்டமில்லாத தும், ஊர்ந்து செல்வதுமான கருத்துக்களையே ப்ளாடோ எழுதினரென்றும், ஆனால் 'இலியத்* காவியத்தைப் படிப் பதற்காகவேனும் கிரேக்க மொழியைச் சிரமப்பட்டுக் கற் றுக் கொள்ளலாம் என்றும் தோரோ கருதினர். லத்தீன் மொழி எழுத்தாளர் பற்றியும் இவ்வாறே கருதினர். தனித் தன்மை வாய்ந்த நவீனக் கருத்துக்களே எடுத்துக் கூறும் வன்மை பெற்றிருத்தலின் ஜெர்மன் மொழியும் கற்றுத் தீர வேண்டிய மொழியாகும். பிரெஞ்சு மொழிபெயர்ப்பி லுள்ள நூல்கள் மூலம் க்ழ்நாட்டு மெய்யுணர்வுகள் சில வற்றைப்பற்றி அறிந்தார் தோரோ. ஒவனைட்' கொள்கை யில் மிகவும் ஈடுபட்ட ஒரெஸ்டீஸ் ப்ரெளன் எலன் என்பவ 18