பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிடம் கொண்ட நட்பின் மூலம் ஆங்கில சோஷலிஸவாதி களின் கருத்துக்களையும் விவாதித்து அவரால் அறிந்து கொள்ள முடிந்தது. இவை அனைத்தையும் விட முக்கிய மானது, தோரோ ஹார்வார்டில் இருந்த காலத்தில் வெளி :பான எமர்ஸ்னுடைய இயற்கை - என்ற நூலே ; அது தோரோவின் உள்ளத்தில் இயற்கையோடு இணைந்து வளர்ச்சியடைய வேண்டும் என்று பனிப்படலம் டோல் இருந்து வந்த எண்ணத்தை உருப்பெறுமாறு செய்தது. எமர்ஸன் பின்வருமாறு எழுதியுள்ளார் : உலகம் ஏன் ஒற்றுமை இழந்து, சுக்கல் சுக்கலாகக் கிடக்கிறது என்ருல், மனிதன் தனக்குள்ளாகவே ஒற்றுமையின்றி இருக்கிருன் ... ... ஆகவே உங்களுக்குள்ளாகவே ஒரு சொந்த உலகைப் படைத்துக் கொள்ளுங்கள். இளம் பட்டதாரியான தோரோ வாழ்க்கையில் என்ன செய்யவேண்டும் என்பது பற்றித் தெளிவான கருத்தில் லாதவராக இருந்தார். பொருள் தேடுவதற்காக அவர் ஆசிரியப் பணியை மேற்கொள்ள வேண்டுமென அவரு டைய பெற்றேர்கள் கருதினர் ; ஆணுல் ஒரு கவிஞனுக இருக்கவே அவர் விரும்பினுர். ஒரு கவிஞன் என்ற முறையில்தான் எமர்ஸனுடைய குழுவினர் அவரை ஏற்றுக் கொண்டனர். 1837 ஆகஸ்ட் மாதத்தில் ஹார்வார்டி லிருந்து மீண்டவர், சில காலத்துக்கு மட்டும் இப்பணியை மேற்கொள்ளலாம் என்று கருதி, செப்டம்பர் மாதத்தில், காங்க்கார்ட் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியரானுர், இரு வாரத்திற்குள்ளாக கிராமக் கல்விக் குழுவினருடன் அவர் சண்டையிட நேர்ந்தது. காரணம் என்னவெனில், தோரோ நம்பாத ஒன்றை, அதாவது பிள்ளைகளே அடித் துத் தண்டிக்க வேண்டும் என்பதை அந்தக் குழுவினர் வலியுறுத்தினர். மாதா கோவில் அதிகாரிகளுள் ஒருவர், அடித்தலாகிய தண்டனையைத் தந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்தியதால், ஹென்றி அறுவருக்குப் பிரம்படி தரநேரிட்டது. இதனுல் விளைந்த வெறுப்புக் காரணம. கப் பள்ளியைவிட்டு வெளியேறிய அவர், அடுத்து அதனுள் நுழையவே இல்லை. குழந்தைகளே அடிக்கும் ஆசிரியராக இருப்பதைக் காட்டிலும் தெருச் சுற்றும் சோம்பேறியாகக் கூட இருக்கலாம் என்று கருதினர். அவர் செய்த இக் காரி யம்பற்றி அவருடைய பெற்றேர்கள் என்ன நினைத்தார்கள்