பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை நாம் இன்று அறிய ஆதாரம் ஒன்றுமில்லை. ஆனல் மெளனம் சாதிக்கும் அவருடைய தந்தையார், தம்முடைய சிறிய தொழிற்சாலையை நம்பி வாழ்க்கையை நடத்தவேண்டிய கட்டுப்பாடுடமையின், முரட்டுத்தனம் நிறைந்த தம்முடைய மகன் செய்த இந்தக் காரியத்தைப் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று ஊகித்துப் பார்க்க லாம். ஆனல், அதே நேரத்தில் தோரோவின் குடும்பம் முழுவதும் ஹென்றியின் இந்தச் செயலைப் பரிவுடன் ஆதரித் திருக்கும். ஏனென்ருல், மனிதப் பண்பை வளர்க்க வேண்டும் என்ற புரட்சி மனப்பான்மை உடைய அந்தக் குடும்பம், அடிமை வழக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒரு மையமாக அந்த நேரத்தில், இருந்தமையின் வேறு விதமாக நடந்திருக்க முடியாது. இதனிடையில் ஹென்றி என்ன தொழிலே மேற்கொள் வது ? வாழ்க்கை வசதிகளே எவ்வகையில் பெறுவது என்ற பிரச்னை நீண்ட காலம் அவரை வாட்டியது. தாம் மேற் கொள்ளும் பணியில் முழு மனத்துடன் எவ்வளவு காலத் தைச் செலவிட வேண்டும் ? எவ்வளவு சக்தியைச் செல விட வேண்டும் என்பதுபற்றிக் கவலேப்படாமல் இருக்கக் கூடிய ஒரு பணியை அவர் நாடினர். ஒரு கவிஞன் அல்லது திறய்ைவாளனுடைய தொழில்முறை அலுவல், காங்க்கார்டு கிராமத்திற்குத் தேவைப்படவே இல்லை. இந்த நேரத்திற்கு, பயனற்ற ஊர்சுற்றியாக இருக்க விரும்பாத அவர், தம் தந்தையாரின் பென்சில் தொழிற்சாலையில் உதவி செய்ய விரும்பினர். ஆளுல் பென்சில் வாணிகத் திற்கு அக்காலம் ஏற்றதாக இல்லை. தோரோ பென்சில்கள் உயர்ந்த ரகமுடையனவாயினும் வெளி நாட்டிலிருந்து வந்து குவிந்த மட்டரகமான பென்சில்களுடன் அவை போட்டியிட முடியவில்லை. ஆகவே, அந்த நிறுவனம் தோரோ அண்டு சன்ஸ்' எனப் பெயர் பெற்றிருந்தாலும், ஹென்றி உட்பட மைந்தர்கள் அனைவரும் அங்கு இருந்தா லும், அவர்கள் அனைவரும் இாைபகரமாக அதில் ஈடுபட Gಖ6-L! அளவுக்கு, அங்குப் போதிய வேலே இல்லை. எனவே, தோரோ மைந்தர்கள் வாழ்க்கை நடத்தப் பிற துறைகளே நாட வேண்டியிருந்தது. கிராமப் பள்ளிக் கூடத்தில் ஹென்றிக்கு ஏற்பட்ட குழப்பத்திற்குப் பிறகு, 20