பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகோதரர்கள் அனைவரும் கூடித் தாங்களாகவே ஒரு பள்ளிக்கூடம் தொடங்க வேண்டும் என்று முடிவு செய் தார்கள். அவ்விதமே 1838 இல் ஒரு பள்ளியைத் தொடங் கினர். மூன்று மாதம் முடிவதற்குள் ஜான், ஹென்றி தோரோ ஆகிய இருவரும் காலியாக இருந்த காங்க்கார்ட் சொற்பொழிவுக் கூடத்தை இப்பள்ளிக்காக எடுத்துக் கொண்டனர். ஆஜர் பட்டியலில் காணப்பெற்ற இருபத் தைந்து பிள்ளேகளுடன் பள்ளிக்கூடம் தொடங்கப் பெற்ற தாலும் பள்ளியில் சேர விரும்பிக் காத்திருந்தவர்கள் தொகை மிகுதியாக இருந்தமையாலும் பொருளாதார முறையில் இம்முயற்சி சில காலத்திற்கு வெற்றி தரும் என்றே நம்பினர்கள். . . எவ்வகையாக நோக்கிலுைம், இப்பள்ளிக்கூடம் சிறந்ததாகவே காணப்பெற்றது. பாடத் திட்டம் நல்ல முறையில் அமைக்கப்பெற்றிருந்தது. மாணவர்களிடையே உடல் தண்டனையில்லாமலேயே ஒழுக்கமும், கட்டுப்பாடும் சிறந்த முறையில் திகழ்ந்தன. ஹென்றி எமர்ஸனுடைய கூட்டத்தில் அடிக்கடிப் பழகி வந்ததாலும் கூட்டத்தில் பலர் கல்விபற்றிய புதிய புதிய கருத்துக்களைப் பயிற்சிக்குக் கொண்டுவர முற்பட்டமையாலும் ஹென்றியின் பள்ளிக் கூடத்தில் ஒரு வகையான முற்போக்குக் காணப் பெற்றது. எமர்ஸனுடைய வீட்டில் கூடிய நண்பர்கள் தம்முடைய சிறந்த சொல்வன்மையினுல் தாங்கள் கூறவந்த விநோத மான கல்விபற்றிய கருத்துக்களே ஆணித் தரமாகப் பேசினர் என்ருலும் தோரோவை இவை முற்றிலும் கவரவில்லை. ஏனென்றல், அவருடைய கொள்கைகளும், தத்துவங்களும் முன்னரே ஒரு வடிவு பெற்றுவிட்டன. பிற்காலத்தில் அவை இன்னும் பண்பட வேண்டிய நிலமை இருப்பினுங் கூட, அதிகப்படியான மாற்றம் ஒன்றும் அடையப் போவ தில்லை. பிற்காலத்தில் இருக்கப் போவது போலவே இப் பொழுதுங்கூடத் தோரோவின் கருத்துக்கள் மிக உயர்ந்த தனித்தன்மை பெற்று விளங்கின. என்ருலும், அவை, வாழ்க்கையோடு தொடர்பற்றவையாக இருக்கவில்லே. அவரைப் பொதுத் தவரை தத்துவ சாஸ்திரத்தில் மெய் யுணர்வை நாடியே சென்ருர். கிராமியத் தொழில்களேச் செய்வதிலும் கைதேர்ந்தவராக இருந்த காரணத்தால், 21.