பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய சமுதாயக் கொள்கைகளைக்கூட அவை எவ்வளவு துரம் நடைமுறைக்கு ஒத்துவரும் என்ற அளவு கோலேக் கொண்டே அளந்து பார்க்கத் தொடங்கினர். - ஹென்றி இளங் குழந்தைகளுக்குச் சிறந்த ஆசிரியராக இருந்தார். அவரை யொத்த இளைஞர்களுடன் கூடியிருப் பதைக் காட்டிலும் தாம் தனிமையாகவே இருக்க விரும்பி யதை ஒளிவு மறைவின்றி அவர் வெளியிட்டார். என்ரு லும், பிள்ளைகளைக் கூட்டமாகச் சேர்த்துக் கொண்டு சென்று கிராமத்தைத் சுற்றியுள்ள பகுதிகளில் ஹக்கிள் பெரிப் பழங்களைச் சேகரிக்க விரும்பினர். அம்மாதிரி சந்தர்ப்பங்களில் கிராமக் கலைகளேப்பற்றி அவர்களுக்குக் கற்பிக்கவும், இயற்கைபற்றியும், சிவப் பிந்தியர்கள் பற்றி யும் தாம் அறிந்தவற்றை அவர்களுக்குக் கூறவும் செய்தார். குழந்தைப் பருவ நினைவுகளே மிக ஆழமாக மனத்தில் பதித்து விட்டமையின், பிற்காலத்தில் அக் காடுகளுக்கு எப்பொழுது மீண்டாலும், பழைய வாழ்க்கையை, அந்த இன்ப நாட்களே, மறுபடியும் அப்படியே நினைவுக்குக் கொண்டுவர முடிந்தது. ஹென்றியின் மேதை காரண மாகப் பாடத் திட்டத்திற்குப் புறம்பான நிகழ்ச்சிகளின் மூலமாகவும் கற்பிக்கும் முறையில் தோரோப் பள்ளி வளர்ச்சியடைந்தது. இரண்டு சகோதரர்களும் மிக நெருங்கிய தோழர்களாக இருந்தமையின் பல சமயங்களில் ஹென்றியை ஜான்தான் காடுகளுக்கு அழைத்துக் சென் ருர், பறவைகளைக் கூர்ந்து கவனிப்பதில் ஜான் மிகவும் நிபுணராக இருந்தார். இன்னும் சில காலம் அவர் உயி ருடன் வாழ்ந்திருப்பின் ஹென்றியை விடச் சிறந்த இயற்கைவாதியாக இருந்திருப்பார். ஓராண்டு வெற்றிகர மாகப் பள்ளிக்கூடத்தை நடத்தி முடித்த பின், உள்ளுரி லுள்ள ஓடைகளின் வழியே படகு ஒட்டிக்கொண்டு உல்லாசப் பயணம் சென்ருர்கள். இரவு நேரங்களில் கரை களிலேயே தங்கிச் சென்றனர். பறவைகளைக் கூர்ந்து கவனிப்பதில் ஜான் மகிழ்ச்சியடைந்தார். ஹென்றியோ வெனில், படகிலேயே அமர்ந்து கொண்டு அல்லிப் பூக் களின் அழகையும் ஆற்றின் கர்ைகள்ல் நின்று மீன்பிடிப் பவர்களின் பொறுமையையும், தன்னிரின் பளபளப்டை யும், பாய்ச்சலையும் அனுபவிப்பதிலும், இவையனைத்தையும் தம்முடைய நாட்குறிப்பில் பதிவதிலும் பொழுதைக் கழித்தார். . 22