பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜானுக்கு இருபத்து நான்கு வயதும், ஹென்றிக்கு இருபத்து இரண்டு வயதும் ஆயிற்று. வாழ்க்கை இன்ப மாக இருப்பினும், புதிதாகத் தோன்றுகின்ற உணர்ச்சிப் போராட்டங்களின் தொல்லைகளிலிருந்து அவர்கள் விடுபட வில்லே. சகோதரர்கள் இருவருமே காதல் கொள்ளக் கூடிய பருவம் அது. ஆதலால் அந்தக் கோடைக் காலத் தில், மிகவும் பழகியவரும், பதினேழு ஆண்டுகள் நிரம்பப் பெற்றவருமான எல்லன் ஸ்வெல் என்ற பெண்ணே, இருவருமே காதலிக்கத் தொடங்கினர். இப்பெண், அவர் கள் குடும்ப நண்பராக இருந்ததுடன் அவர்கள் பள்ளிக் கூடத்தில் கல்வி பயில்கின்ற ஒரு மாணவனின் சகோதரியு. மாவார். காங்க்கார்டு, மெர்ரிமாக் ஆகிய ஆறுகளின் இடையே அவர்கள் கூடாரமடித்துத் தங்கியிருந்த நேரத் தில்கூட சோதரர்களின் நடுவே, அந்தப் பெண் ஒரு நிழல்போலக் காட்சி தந்ததை ஹென்றி மட்டுமே உணர்ந் தார். ஏனென்ருல், எல்லனைத் திருமணம் செய்துகொள் ளப் போவதுபற்றிய தம் கருத்தை, ஜான் ஒளிவு மறை வின்றி எடுத்துக் கூறிஞரேனும், ஹென்றி வெளிப்படை யாக ஒன்றும் சொல்லவில்லே. ஏனென்ருல், அவருடைய காதல் பிறரிடம் மறைக்கப்பெற்ற பொருளாக இருந்த துடன், இறுதி வரையும் அவ்வாறே அமைந்துவிடும் போல வும் தோன்றியது. ஓராண்டு கழிந்தது. அடுத்த கோடையில், ஜான், தம்மை மணந்துகொள்ளுமாறு எல்லனேக் கேட்டார். மிக நீண்ட தயக்கத்திற்குப் பிறகு, இறுதியாக, எல்லன் அவரை மறுத்து விட்டார். எதிர்பாராத இந்நிகழ்ச்சி, தம் காதலில் புதிய நம்பிக்கை கொள்ளுமாறு ஹென்றியைத் தூண்டியது. சில மாதங்கள்வரை நடைபெற்ற கடிதப் போக்குவரத்திற்குப் பிறகு சிட்டுவேட் என்ற ஊரில் உள்ள அவருடைய வீட்டு முகவரிக்குத் தம் காதலே வெளிப்படுத்தி ஒரு கடிதம் வரைந்தார். அவர் கட்டிய கோட்டைகள் இடிந்து மண்ணுகும் சூழ்நிலை இப்பொழுது ஏற்பட்டது. தோரோ சகோதரர்களிடம் அவள் மிகவும் அன்பு வைத் திருந்தாலும் அவர்களில் ஒருவரையும் காத விக்கவில்லே. அவர்களிடையே இருந்த நட்பு முன்போல் இருக்க முடியாது என்பதை நினைத்து அவள் மிகவும் வருத்தமடைந்தாள். இதுபற்றிய அவளுடைய கடிதம் 23