பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்று பாதுகாக்கப் பெற்றுள்ளது. ஹென்றி தோரோ வுக்கு, அன்று மாலை விடை யெழுதினேன். என் வாழ்நாள் முழுவதிலும் ஒரு கடிதம் எழுதுவதற்கு அவ்வளவு வருத் தமடைந்ததில்லை. எந்த இரண்டு நண்பர்களிடம் மிகவும் மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் இருந்தேனே அவர்களிடம் முன் போல் மனம் விட்டுப் பழக முடியாது என்பதை நினைக் கும்பொழுது மிகவும் வருந்துகிறேன். என்னுடைய கடிதம் உண்மையிலேயே மிகவும் சுருக்கமானது. என்ருலும் அதன் பயன் சரியானதென்றே நினைக்கிறேன். இதன் பிறகு ஹென்றி வேறு எந்தப் பெண்ணையும் கண்ணெடுத் துப் பார்த்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அவருடைய கற்பனையில் லட்சிய வடிவு கொண்ட எல்லனுக்குப் பிறகு வேறு பெண்கள் வெறுப்புை விளைவித்தார்கள் போலும் ! 24