பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பர்களிலிருந்து அவரை வேறு பிரித்துக் காட்டிற்று. காங்க்கார்டு கிராமப் பகுதிகளில் அவர் தனியே உலவச் செல்லும்பொழுதெல்லாம், தாம் கண்டவற்றை நாட்குறிப் பில் குறித்துக் கொள்ளும் பழக்கத்தை மேற்கொண்டார். இத்தகைய ஒரு பழக்கத்தை எமர்ஸனும் மேற்கொள்ள விரும்பினர் : “ என்னுடைய ஆயுள் மிக நீண்டதாக இருப்பின், நான் எழுதும் பல்வேறு நூல்களினிடையே இயற்கையைப்பற்றிய நூலும் ஒன்ருக இருக்கும்... ... ... ஒர் ஆண்டின் பல்வேறு மாதங்களிலும் நான் தங்கியிருக்கும். பல்வேறு முகாம்களைச் சுற்றி உள்ள காட்டுப் பகுதிகளின் இயற்கை வரலாறே இந்நூலில் காணப் பெறும். நான் எழுதக் கூடிய அந்த இயற்கை வரலாற்று நூலில் வான இயல், தாவர இயல், உடலியல், வானிலை இயல், காட்சிக் கவின், கவிதை ஆகிய அனைத்தும் தக்க முறையில் இடம் பெறும். இன்று அங்கு நிலைபெற்றுள்ள பறவை, பூச்சி, மொக்கு ஆகியவற்றுள் எவற்றையும் விட்டுவிடாமல் சேர்க்க விரும்புகிறேன் என்று எமர்ஸன் எழுதினர். ஆலுைம், பல நூல்களே எழுத வேண்டியும் பல சொற். பொழிவுகளே இயற்ற வேண்டியும் உள்ள ஒரு பெரிய, நிகழ்ச்சியில் ஏற்கெனவே ஈடுப்பட்டிருத்தலின் எமர்ஸன் இதனைச் செய்ய முடியாதவரானர். அவரைப் பொறுத் த. வரை இயற்கை வரலாறு என்பது ஓய்ந்த நேரத்தில் மகிழ்ச்சிக்காக ஏற்றுக் கொள்ளும் ஒரு பொழுதுபோக். காகவே இருந்தது. அது எவ்வாறிருப்பினும் ஹென்றியிடம் காணப்பெற்ற இயல்பான ஒர் ஆர்வம் எமர்ஸனிடம் இல்லை. இலக்கியத் துறையில் தோரோ எத்தகைய. பணிகளே மேற்கொண்டாலும் அவருடைய ஆர்வமே அதற்குக் காரணம் என்பதையும் எமர்ஸன் உணர்ந்தார். * காங்க்கார்டின் தலைசிறந்த மனிதர் - என்று கூறத் தகுந்த முறையில் ஹென்றியிடம் சில பண்புகள் அமைந் திருந்தன என்பதை எமர்ஸன் கண்டார். ஆனல் எமர்ஸ்குே. எனில் ஹென்றியைவிட அதிகம் கற்றவராய், அதிகம் யாத் திரை செய்தவராய், அதிகம் உலகியல் தெரிந்தவராய் விளங்கினர். இதன் எதிராக, ஹென்றி, காங்க்கார்டைச் சுற்றி அதிகம் சுற்றித் திரிந்தவர் என்பதில் பெருமை யடைந்தார்.ஹென்றியைப் பொறுத்தமட்டில் உள்ளுரிலுள்ள ஒரு சிறு பகுதியுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டி 26