பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருப்பது, உலகம் முழுவதையும் வெகு வேகமாகச் சுற்றிவந்து அங்குக் கிடைக்கும் பல்வேறு காட்சிகளையும் காண்பதைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதினர். மேலும், * உலகத் தின் செம்பாதியைச் சுற்றிச் சென்று ஸ்ான்ஸி பாரிலுள்ள பூனேகளே எண்ணுவது பயனற்ற செயல் என்றே அவர் கருதினர். அன்றியும் உலகத்தின் ஒரு. பாதியிலுள்ளவர்கள் மற்றவர்கள் எவ்வாறு வாழ்கிருர்கள் என்பதை அறிவதில்லையென்று கூறுவதில் உண்மையில்லே என்றே கருதினர். * உலகத்திலுள்ள மக்களுடைய வாழ்க்கை முறை ஒரே மாதிரியாக இருப்பதுடன் பலரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய எளிய அனுபவங்களையும் கொண் டுள்ளது: என்றும் கூறியுள்ளார். நீண்டு வளைந்த சந்து பொந்துகளிலெல்லாம் ஹென்றி சுற்றியலைந்தார். பல சமயங்களில் இச்சந்துகள் யாரும் நட மாடாத பாதைகளின் வழியாகச் சென்று காங்க்கார்டின் அதிக வளப்பமில்லாத புல்வெளிகளினூடும் தரிசு நிலங்களி' னுாடும் சென்று இறுதியாக, காடுகளிலும், குட்டைகளிலும் முடிவடைந்தன. மஸ்கெட்டாக்குவிட்-மெள்ளச் செல்லு: கின்ற காங்க்கார்டு ஆற்றுக்கு பழங்காலச் சிவப்பிந்தியர்கள் வைத் திருந்த பெயர் இதுவேயாகும்-என்ற இப்பெயரையே அவர் அதிகமாய் விரும்பினர். அதன் கரை வழியே நடந்து செல்வதை அவர் பெரிதும் விரும்பினர். இந்த ஆறு ஒக் மரங்கள் நிறைந்துள்ள வழிகளிலும் பாசிப்படலம் போல க்ரேன் பெர்ரிக் கனிகள் மண்டிக் கிடக்கின்ற பரப்புகளுடும் ஒடிச் செல்லுகிறது. மேலும், அலரிச் செடிகள், மேப்பிள்கள், ஆல்டர்கள் ஆகிய மரங்களும் திராட்சைக் கொடிகளோடு சுற்றிக்கொண்டு வளர்ந்திருந்தன. இவை யனைத்தும், நீண்டு வளர்ந்துள்ள செஸ்ட் நட், பைன் ஆகிய மரங்களு, டன் போட்டியிட்டுக் கொண்டு சூரிய ஒளிக்குத் தலையை நீட்டின. மீன்கள், விலங்குகள், பூச்சிகள் பறவைகள், மலர்கள், மரங்கள் ஆகிய இயற்கைப் பொருள்கள் அனைத்துமே இப் பொழுது அவருடைய மனத்தைக் கவர்ந்தன. இவையனைத் திலும் தம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தி, தம் கூர்மையான பார்வையாலும் தனித்தன்மை பெற்ற மனத்தா லும் கண்டவற்றைத் தம்முடைய குறிப்புப் புத்தகத்தில் 27