பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிரப்பிக்கொண்டார். பொறி புலன்கள் மூலமாக இவர் இயற்கையை அணுகின காரணத்தால் அப்பொறி புலன்கள் இயற்கையின் மூலமாக எல்லையற்ற இன்பத்தைப் பெற்றன. புற நிலையில் தனிப்பட்ட விஞ்ஞான முறையில் இயற்கையை அணுகுவது அவரைப் பொறுத்தமட்டில் நேர்மையாகப் பட வில்லை. கிராமத்தை விட்டு நீங்கியதுமே அவருடைய மன நிலையில் ஏற்பட்ட மாறுதலைக்கண்டு அவருடைய நண் பர்கள் வியப்படைந்தனர். காடுகளில் நுழைந்தவுடனேயே ஏதோ ஓர் அற்புதம் நிகழப் போவதை எதிர் பார்ப்பது போன்ற ஒரு மனநிலை அவரிடம் காணப்பெற்றது. தாவர இயலைத் தொடர்ந்து கற்கும் மன நிலையிலும், பரவலாக உள்ள இடங்களில் வளர்ந்திருக்கின்ற பல் வேறு வகைப்பட்ட தாவரங்களின் வளர்ச்சியையும் ஒரே நேரத் தில் அறிய விரும்பும் மனநிலையிலும் இருந்ததால், நாள்தோ றும் இருபது அல்லது முப்பது மைல்கள் கூட அவர் நடந்து சென்று வருவார். மர முளைகளைக் கூர்ந்து நோக்கி, ஒப்பு மைப் படுத் திப் பார்ப்பதற்காக மிக நீண்ட பிரயாணங்களே மேற்கொண்டார். சில சமயங்களில், பல மணி நேரங்கள் காட்டுப் பகுதிகளின் எதிரே, ஒன்றுமே செய்யாமல் நின்ற வாருே அல்லது இருந்தவாருே அவற்றைக் கூர்ந்துகவனிப் பதன் மூலம், அப்பொருள்கள் தங்கள் உண்மைத் தத்துவங் களேத் தாமே வெளியிடுமாறு செய்துவிடுவார். ஆற்றின் கரையில் பல மணி நேரம் படுத்தபடியே மூஞ்சுறுகளையும், மீன்களையும் கூர்ந்து கவனிப்பார்; பெளட் என்ற மீன்களே யோ அல்லது கராஸ் அல்லது ப்ரீம் என்ற மீன்களேயோ எவ்வாறு பிடிப்பது என்பதையும், சகதி நிறைந்த தண்ணி ரில் இறங்கி எவ்வாறு ஓர் ஆமையைப் பிடிப்பது என்பதை -யும் நன்கு கற்றிருந்தார். பறக்கும் அணில்கள், முட்டை யிடும் ஆமைகள், ஆந்தைகளின் குரல்கள் இவற்றை வர் ணித்துள்ளார். தவளைகள், சுண்டெலிகள், பருத்துகள், பாடும் பறவைகள், பூவாத அழகிய இலைகளேயுடைய செடி கள், அட்டைகள், சிறு பூச்சிகள் மரங்களின் மேல் இட் டுள்ள எச்சங்கள், வளைந்து செல்லும் ஓடைகள், நிலப்பரப் பின் அமைப்பு ஆகியவற்றையும் கூர்ந்து கவனித்துள்ளார். இவையனைத்தையும் ஒரு கோவைப்படுத்தி ஒன்றையும் விட்டுவிட முடியாதபடி வரைந்துள்ளார். 28