பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளிர் காலத்தில் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதி முழு வதிலும் அவரைத் தவிரப் பிறரைக் காணமுடியாது. 6. நேற்று ஒரு நரியைத் துரத்திக் கொண்டு பனியில் சறுக்கிக் கொண்டே சென்றேன். சில சமயம் அது குந்தியவாறு ஒரு சிறிய ஒநாயைப் போல என்னே நோக்கிக் குரைத்தது... ... அதனைத் தொடர்ந்து நான் சறுக்கிச் செல்கையில் தன்னு. டைய முழு வேகத்துடன் ஒட ஆரம்பித்தது. ஆனல் நான் நின்றுவிட்டபொழுது, அதனுடைய பயம் சற்றும் தணிய வில்லையானலும், அந்த விலங்குக்குரிய சிறப்பான இயல்பு. காரணமாகப் போலும், ஓடாமல் நின்று பிறகு குந்திக்கொண் டது... ...' என்று எழுதியுள்ளார். பல சமயம் எதிர்பாராத மகிழ்ச்சியைப் பெறுவதற்காகப் பணியின்மேல் அவர் சறுக் கிக்கொண்டே செல்வதுண்டு. பனி மூன்றடி ஆழமும் பனிக்கட்டி இரண்டடி கனமும் இருந்தன. நேற்றிரவு ஒரு. வேளை 0 டிகிரி உஷ்ணத்திற்கும் 30 டிகிரி குறைவாக. இருந்திருக்கும்போலும் இயற்கையின் ஊற்றுக்கள் அனைத். தும் மூடப் பெற்றிருந்தன. யாத்திரிகன் வழியிலே உறைந்து போனன். ஆணுல் அதோ அங்கே தெரிகின்றபர்ச் மரங்களின் அடியில் சிவந்த மார்பையுடைய ரெட் போல்ஸ் பறவைகள் பர்ச் விதைகளைப் பொறுக்கித் தின்று: கொண்டு உடம்பின்மேல் படியும் பணியை உதறுகின்றன. .. என்ன அழகான காட்சி! இயற்கையின் பல்வேறு பகட். டான நிறங்கள், சிவந்த மார்புகள் ஆகியவை வெண்மை யான பனியின்மேல் இருக்கும் அழகு எத்தகையது? ஒரு தெய்வீகத்தன்மை, அற்புதமான வடவமைப்பு, வண்ணங் களில் ஒரு முழுத்தன்மை ஆகியவை இந்தக் கொடுமையான வறண்ட பருவத்திலும் கூட இருக்கின்றன என்று எழுதி யுள்ளார். கார்லேல் பேசுவதைப் போன்றே அண்டத்தின் தெய் விக ரகசியம் - என்றும் அழகின் ஆழத்திற்கும் அடியிற் கிடக்கும் ஆழமான அழகு - என்றும் தோரோவுங்கூடக் கூறக்கூடிய சந்தர்ப்பங்கள் நிரம்ப இருந்தன. இதன் பய மூக, உலகியல் கடந்த ஒரு சீடனுக, எமர்ஸன், இவரை மதிப்பதற்குக் காரணங்கள் இருந்தன. இந்தச் சந்தர்ப்பத் தில் ஒரளவு அதிகமான சுதந்திர உணர்ச்சி பெற்றவராக இருப்பினும், பழைய மரபுகள், பழகிப்போன கருத்துக்கள் ஆகியவற்ருல் கட்டுண்ணுமலும் உலகத்திற்குரிய பேராசை 29