பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லாமலும் இருந்த இவர், தம் கட்டுக்குள் வந்துவிடுவார் என்றே எமர்ஸன் கருதினர். மாதா கோயில் பட்டியலி லிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட தோரோ, எமர்ஸ் னின் கொடியின் கீழ் முன்னரே கூடியிருந்த பிற இளைஞர் களுடன் சேர்ந்து, வாழ்வில் புதிய கனவுகளைக் காணவும், .புதிய நிஜனவுகளே ஏற்கவும் தயாராக இருப்பார் என்றே தோன்றிற்று. மிகவும் ஊக்குவிக்கப்பெறவேண்டிய இளை ஞராகத் தோரோ இருந்தார். எனவே, எமர்ஸனிடம் அடிக் கடி செல்லத் தொடங்கினர். - எமர்ஸனுடைய வீட்டில், ரால்ஃப் வால்டோ எமர் லஐன அன்றி, அவருடைய இரண்டாம் மனேவியாகிய லிடி யனும் தம்மை விரும்புவதைத் தோரோ அறிந்தார். மிக நீண்ட காலம்வரை அந்த அம்மையாரிடத்தில் ஆழ்ந்த நட்புக்கொண்டிருந்தார். லிடியன், மெல்லிய வடிவமும் வெளுத்த தோற்றமும் உடையவராய் இருப்பினும், தோரோவின் நலத்திலும் முன்னேற்றத்திலும் மிகவும் அக் கறை கொண்டார். தோரோவின் கருத்துக்களைப் பரிவு டன் கவனிப்பார். எனவே, ஹென்றிக்குப் பெண்மையின் உயர் நோக்கத்தின் உருவகமாகவிருந்தார் லிடியன். இளங் கவி ஒருவர் வஞ்சகமின்றித் தம் கவிதைகளை அவர்மேல் பாடக்கூடிய நிலையிலும் இருந்தார். இதற்கு முற்றிலும் .மாருக இருந்த மற்ருெரு பெண்ணேயும் எமர்ஸன் இல்லத் தில் தோரோ சந்திக்க நேர்ந்தது. அப்பெண் மார்கரெட் ஃபுல்லர் என்பவராவார். சக்தி வாய்ந்த எழுத்தாளராக வும், புதுமையின் சிறந்த சீடராகவும், வலிமை பொருந் திய பண்பாடு உடையவராகவும் இருந்த மார்கரெட், ஹென் றியிடத்தில் பின்னர்ப் பயன்படக்கூடிய, ஆளுல் அப்போது அனுபவம் முதிராத ஒர் இளமையை மட்டும்தான் கண் டார்; எனவே, அவர் விரும்பத்தக்கவராயினும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கப்படவேண்டியவர் என்பதை ະ ? 5.6.7. fr ff. எமர்ஸன் இல்லத்தில் அடிக்கடி கூடிய காங்க்கார்டின் அறிவாளிகள் கூட்டம், தம் கூட்டத்தின் தலைமைத் தெய் வமாகிய மர்ஸ்னின் எதிரே புதுமை"த் தத்துவங்களே விவரித்து மகிழ்ந்தது. இந்தச் சீடர்களை நன்கு பரீட்சித் துப் பார்த்து, அவர்கள் ஆற்றும் இந்தப் பெருஞ் சொற். 30