பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உதவிற்று. அதே நேரத்தில், அவரை ஊக்குவிக்கக்கூடிய எமர்ஸ்னே நண்பர்ாகப் பெற்றிருந்தது அவருடைய அதிர்ஷ் டமேயாகும். நல்ல அறிவுரைகள் கூறியும், மேலும் எழுது மாறு தூண்டியும், எமர்ஸன் தோரோவுக்கு ஊக்கமளித் தார். எழுத்து மூலமாகத் தம் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை நிரப்ப நினைத்த தோரோவுக்கு அந்த ஊக்கம் தேவைப்பட்டது. சுவையற்ற ஏதாவது ஒரு தொழிலே மேற்கொள்ளாமல் சம்பாதிக்க வேண்டுமானல் எழுத்து ஒன்றுதான் அதற்குப் புகலிடந் தரும் என்பதைத் தோரோ உணர்ந்தார். அவர் தம்முடைய நாட்குறிப்பில், "எந்த ஒர் உத்தியோகத்திலும் நுழைகின்ற மனிதன் விதி முடிந்த வனேயாவான் ; அவ&னப்பற்றி ஒரு சரம கவியையே உலகத்தார் பாடிவிடலாம் - என எழுதியுள்ளார். 1841 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அவருடைய தமையனரின் உடல்நிலை காரணமாகப் பள்ளிக்கூடத்தை மூடிவிடும் நிலைமை ஏற்பட்டவுடன் தோரோ ஒரளவு பெரு மூச்சு விட்டிருப்பார் என்றே கருதலாம். வேறு வழியே இல்லாவிட்டால் ஒழிய மறுபடியும் பள்ளி ஆசிரியராக அம ரப்போவதில்லை என முடிவு செய்து கொண்டார். சுதந்திரம் அவர் பிடிக்குள் அகப்பட்டுவிட்டதாகவே கருதினர். “ஒரு கோளேவிட நான் சுதந்திர முடையவன்... ... ...மொதுமக்கள் கருத்திலிருந்தும் அரசாங்கம், சமயம், கல்வி, சமுதாயம் ஆகியவற்றிலிருந்தும் நான் விலகிச் செல்ல முடியும். இந்த மண்ணிலேயே வேரூன்ருமல் இருக்கும் என் அதிர்ஷ்டத் திற்கு நன்றி பாராட்ட வேண்டும். உலகம் முழுவதும் இங்கேயே முடிந்து விடவில்லை. நகரத்தின் குமாஸ்தாவாக உத்தியோகம் பெற்றுவிட்டால், இந்தக் கோடைக்காலத் தைக் கழிக்க ட்ரூ டெல் ப்யூகோ வுக்குச் செல்ல முடியாது - என்று எழுதியுள்ளார். ஆகவே, அவருடைய உடல் மட்டும் சுதந்திரமாக இருந்து பயனில்லே எனக் கருதினர் : நம்மில் பலருடைய ஆன்மாவையும், மனத்தையும் பற்றி இருக்கின்ற துருவும் தேக்கமும் அவருக்குப் பெரியதொரு அச்சத்தை விளே வித்துள்ளன. * உண்மையில் உறுப்புகளுக்கு உழைப் பதற்கு உரிய இடம் உண்டு. நம் ஆன்மாதான் ஒரு மூலையில் துருப் பிடிக்கும்படி ஒய்ந்து கிடக்கிறது - என்று 32