பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதியுள்ளார். சுதந்திரம், சுயேச்சை என்ற இரண்டையும் பிடித்துக்கொண்டு விடாமல் இருக்க ஏற்ற முறையில் பெற் ருேர்களின் பிணைப்பிலிருந்து விடுபட்டு அப்பாற் சென்று வாழ விரும்பி, இடம் தேடலானர். பட்டினியாகக் கிடப் பதற்குரிய ஒரு பொந்தை அவர் விரும்பவில்லே , சொற்ப வருமானத்திற்குத் தக்கபடி தம் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழக்கூடிய முறையில் காலியாக இருக்கும் ஒர் இடத்தை நாடினர். அங்கு அவருக்கு விருப்பப்படி சிந்தனை செய்யவும், இயற்கையைக் கூர்ந்து கவனிக்கவும், எழுதவும் நிறைந்த ஓய்வு கிடைக்கும். இப்படிப்படட ஒரு வீடு அவருக்குக் கிடைக்கவில்லை. இன்னுஞ் சில வீடுகளேத் தேட முற்படலாமா என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாரா விதமாக எமர்ஸன் அவருக்கு ஒரு பணியைத் தரவும், 1841 ஏப்ரிலில், அப்பணியை மேற் கொண்டார். - தம்முடைய வாழ்க்கையில் எத்தகைய ஒரு வேலை வேண்டும் எனத் தோரோ எதிர்பார்த்திருந்தாரோ, அதற் கேற்ற முறையிைல் ஒரு பணியை உண்டாக்கி எமர்ஸன் இவருக்கு உதவினர். வேண்டுமான அளவு ஒய்வும், தங்க ஓர் இடமும், தேவையான உணவும், சுருங்கக் கூறினல் சுதந்திரத்தையுமே அது அளித்தது. அவ்வாறு செய்வ 'தால் எமர்ஸனுக்கும் ஒர் இலாபம் ஏற்பட்டது. நீண்ட சொற்பொழிவுப் பயணத்தை எமர்ஸன் மேற்கொண்டா ராதலின், பல வாரங்கட்கு வீட்டை விட்டுச் செல்ல நேரிட் டது. அந்நேரங்களில் தோரோ, எமர்ஸன் வீட்டில் தங்க முடிந்தால், தலைவனில்லாத அவ்வீட்டைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பும் இருக்குமன்ருே ? இதைவிட எமர் ஸ்னுக்குத் திருப்தியளிப்பது வேறு எது இருக்க முடியும்? எமர்ஸனின் குழந்தைகளிடம் ஹென்றி மிகவும் அன்பு பாராட்டினர்; லிடியனும், ஹென்றி தங்கியிருப்பதை வர வேற்ருர் ; குடும்பத்தை நன்கு நடத்திச் செல்லும் ஆற்ற லும் அவருக்கிருந்தது. தோட்டத்தைப் பராமரிக்கவும், Լ4էՔ மரங்களைக் கத்தரிக்கவும், கோழிப் பண்ணேயைப் பாதுகாக் கவும், மாலை நேரங்களில் லிடியனுக்கு உதவியாக இருக்க வும், வருவார் போவாருக்குப் பதில் சொல்லவும் அவரால் முடியும். அவர் தங்குவதற்கு ஒரு தனி அறையையும், அவரு டைய உணவையும் மட்டுமே எமர்ஸன் தந்தார். எமர்ஸன் 3 33