பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும் பணக்காரர்அல்லர் ஆகலின் சம்பளம் என்றுஒன்றும் கொடுக்கவில்லை. ஆளுல், தம்முடைய நாட்குறிப்பில் செல் வச் செருக்கைத் தவிர வேறு எவ்விதப் போராட்டத்தையும் நான் காணுமல் இருப்பேனுக என்று எழுதிய தோரோ வுக்கு இது ஒரு பெரிய கஷ்டமாக இல்லே. மேலும் அவரு டைய கடமைகளும் மிக எளிமையானவையாகவே இருந் தன. அவர் விருப்பம்போல் எப்பொழுது வேண்டுமாயினும் வந்துபோகலாம் ; குடும்பத்தினருடன் சம அந்தஸ்துடன் பழகலாம். முகிழ்த்து வரும் எழுத்தாளர் ஒருவர் இதை விடச் சிறந்த ஒன்றை வேண்டுவதுண்டோ? எமர்ஸனும் அவருடைய நண்பரான ஆல்காட்டும் தம் முடைய இரு குடும்பங்களையும், எமர்ஸனின் வீட்டினுள் ளேயே ஒன்ருக்கிவிட விரும்பினர்கள் எனினும், உலகியல் அனுபவம் நிறைந்த அவர்களுடைய மனைவிமார்கள் இக் கருத்தை உதறிவிட்டனர். ஆல்காட்டுக்குப் பதிலாக இப் பொழுது ஹென்றி வந்து சேர்ந்தார். ஹென்றிக்கும் எமர் லன்கட்கும் இடையே சுமுகமான உறவு நிலவியதால் இந் தச் சோதனை வெற்றிபெற்றது. தம்முடைய வீட்டில் தங்கி யிருந்த நாட்களில், தாமே முயன்று தோட்டவேலை செய்ய விருப்பமும், உடல்வன்மை இல்லையாயினும், ஹென்றியின் பின்சென்று ஓரளவு தோட்டவேலையில் ஈடுபடுவதில், எமர் ஸன், இன்பமும் கண்டார். காடுகளில் புகுந்து புதிய புதிய தாவரங்களையும் விலங்குகளையும், பார்க்கும் முறையில் ஹென்றி அழைத்துச் சென்ற பொழுதெல்லாம், எமர்ஸன் மகிழ்ச்சியடைந்தார். நிலவொளியில் இயற்கை யழகை அனுபவிப்பதற்காக ஒருநாள் இரவில் எமர்ஸ்இனப் படகு மூலம் காங்க்கார்டு ஆற்றில் தோரோ அழைத்துச் சென்ருர். தன்னை மறந்த இன்பத்தை அனுபவித்த எமர் ஸன் தம்முடைய நாட்குறிப்பில் ஒரே ஒரு வயலைக் கடந்து படகை அடைந்த நாங்கள் அந்தக் கணத்திலேயே காலம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய அனைத்தையும் ஒருசேர பிறந்து, முதல்முறைத் துடுப்புப் போட்டவுடன் இயற்கை யோடு இயற்கையாக ஒன்றிவிட்டோம் என்று எழுதி யுள்ளார். காங்க்கார்டு கிராமத்தின் பண்பாட்டு நிலையம் என்று கூறக்கூடிய இடத்தில், “தி டயல்' இதழ் காரணமாகவும், 34