பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்னுக்குத் தெரிவித்துள்ளார். "பிறரிடம் காணப்படாத ஒப் புயர்வற்ற தன்மைகள் எமர்ஸனிடம் உண்டு. மனிதனது தெய்வீகச் சக்தி எளிதாகவும் வரன்முறையோடும் அவரி டம் வெளிப்படுவதைப்போல் வேறு எவரிடமும் வெளிப்பட வில்லை. இளைஞர்களிடம் அவருக்குள்ள செல்வாக்குப் போல், எவருக்கும் கிடையாது. அவருடைய உலக வட்டத் தில் ஒவ்வொருவரும் கவிஞராகவே இருப்பர்.........' எனவே, வளர்ச்சியடையும் ஒரு கவிஞராகவே தோரோ எமர்ஸனுடைய பாதுகாப்பில் வளர்ந்தார்; இப்போது "டயல்- இதழ் மூலமாக இலக்கிய உலகில் பயணம் தொடங்கினர். ஆலுைம், டயலில்’ கூட அவரது சிறந்த எழுத்துக்கள் கவிதை வடிவில் வெளிப்படவில்லை. *மெஸ்சூஸிட்ஸின் இயற்கை வரலாறு’ என்ற நீண்ட கட் டுரை 1842 இல் வெளியாயிற்று. விஷயத்தைக் கூர்த்த மதியுடன் கையாள்வதிலும், வருணனைகளே அழகுற அமைப்பதிலும் இக் கட்டுரை சிறந்து விளங்கியது, ஹென்றி எதிர்காலத்தில் உயர்ந்த உரைநடை எழுத்தாள ராகத் தான் மலரப்போகிருர் என்பதற்கு இது எடுத்துக் காட்டாய் விளங்கியது. வாசூஸெட்டில் நடை யாத் திரை என்ற அவருடைய கட்டுரை அடுத்த ஆண்டு வெளிவந்தவுடன் பிரயாண நூல்கள் எழுதுவதில் தோரோ மிகத் தேர்ந்தவராவார் என்பது நிச்சயமாயிற்று. - ஆசிரியர் பதவியிலிருந்து நீங்கின பிறகு, தம்முடைய வாழ்க்கையில் எதைச் செய்வதென்று சிந்தித்து முடிவு காண்பதற்கிடையில், ஹென்றிக்கு எமர்ஸன் வீட்டில் தங்கிய காலம் ஓர் ஓய்வைத் தந்தது. வருத்தத்தை விளே விக்கும் இந்த முடிவை மேற்கொள்ளுமுன்னரே, கழிந்த இரண்டாண்டுகளில் ஆழமான கருத்துக்களையும், அகன்ற அனுபவத்தையும் காங்க்கார்டு கிராமத்தின் இயற்கை வரலாற்ருேடு நெருங்கிய தொடர்பையும் அவர் பெற முடிந் தது. 1842 ஜனவரியில் எமர்ஸனின் மைந்தனுகிய வால் டோவும், ஹென்றியின் சகோதரராகிய ஜானும் மரண" மடைந்ததால் ஏற்பட்ட துயரம் இல்லையாளுல், இந்தக் காலம் முழுவதையும் ஹென்றி ஒரு கவலையும் இல்லாமல் மிக்க மகிழ்சசியோடு கழித்திருப்பார். எலும்புருக்கி நோெ லிருந்து ஓரளவு உடல் நலமுற்ற ஜான் 1841 ஆம் ஆண்டு முடிவதற்குள் வெளியே உலாவும் சக்தியைப் பெற்ரும், 36