பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவருடைய நோ யி ன் காரணமாகத் தான் பள்ளிக் கூடத்தை மூட நேர்ந்தது. ஆலுைம், 1842 ஆம் ஆண் டின் முற்பகுதியில் ஒருநாள் முக கூடிவரம் செய்துகொள் ளும்பொழுது ஏற்பட்ட காயத்தினுல் இரத்தத்தில் நஞ்சு கலந்து, மிகச் சில நாட்களுக்குள் மரணமடைந்தார். இதற்கு முன் அனுபவித்திராத முறையில் ஹென்றி. தனிமையை உணர்ந்தார். ஜூலே மாதத்தில் வெப்பம் மிகுந்த வெளிகளில் நடந்து சென்று வாசூஸெட் மலேயின் சிகரத்தில் நின்று பார்த்தபோது வட புறத்தில் அடி வானத்தையொட்டி மெனுட்னுக்ஸ் மலையின் மிக உயர்ந்த சிகரம் காட்சியளித்தது. என்ருவது ஒருநாள் அதன் உச்சியில் ஏற வேண்டுமென்று உடனே முடிவு செய்துகொண்டார். மீண்டு வந்து, எமர்ஸனுடைய வீட் டில் தமக்குரிய அறையில் தங்கி, தம்முடைய பயணத்தைப் பற்றி ஒரு கட்டுரையை வரைந்து பாஸ்டன் மிஸெலனி: என்ற பத்திரிகைக்கு அனுப்பினுர். எமர்ஸனுடைய வீட்டில் தங்கியிருந்த இரண்டாண்டு களில் இலக்கியத்துறையில் ஒரளவு வெற்றியைப் பெற்ரு லும், எமர்ஸ்இனப்போல் பொதுமக்கள் விரும்பும் வகையில் எழுதி, சொற்பொழிவுகள் ஆற்றினலொழிய, வாழ்க்கைக் குத் தேவையான அளவு சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்தார். இந் நிலையில் சொற்பொழிவு செய்யத் தொடங்கினுலும் காங்க்கார்டுக்கு அப்பால் அவர் செல்ல வில்லை. ஒருவேளை பிற்காலத்தில் அவர் புகழ் அடைய லாம் என்ருலும், அதுவரையில் எவ்வாறு வாழ்க்கை நடத்துவது? எந்த அலுவலே மேற்கொள்வது ? கட்டுப் பாடற்ற காட்டு வாழ்க்கையை அவருடைய அகமனம் நாடியது. மனம் விரும்பாத ஒர் அலுவலில் அமர்வது தம்முடைய குறிக்கோளைத் தாமே ஏமாற்றிக் கொள்வ தாகும் என அவர் உணர்ந்தார். உடலாலும், மனத்தா -லும் சுதந்திரமாக வாழும்பொழுதுதான் ஒருவருடைய குனத்தில் அமைந்த வலிமை வெளிப்பட முடியும். அவ ருடைய நாட்குறிப்பில் பிடிவாதத்தின் மூலமோ, கொடு மையின் மூலமோ உண்மையான ஞானத்தைப் பெற முடி யாது. அதன் எதிராக, எதைப்பற்றியும் கவலைப்படாமல், குழந்தையைப்போல் மகிழ்ச்சி கொள்வதில் தான் அதனைப் 37