பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெற முடியும் என்று எழுதியுள்ளார். நவீன யுகத்தின் இயல்பாகவுள்ள ஓயாத அவசரம், ஓயாத வேலை என்ற இரண்டையும், இயற்கை, முற்றிலும் மறுப்பதாகவே தெரி கிறது. எவ்வெப்பொழுது முடிந்ததோ, அவ்வப்பொழு தெல்லாம் மிக நீண்ட நடைப் பயணங்களே ஹென்றி மேற் கொண்டார் ; தாம் சிறுத்தைத் தவளைகளோடு நடத்திய மிகவும் சுவையான பன்னிரண்டு மணி நேர உரையாடல் பணம் சேகரிக்கச் செலவழிக்கும் ஒருநாளை விட மிகப் பயனுடைய காலமாகும்- என்று கூறியுள்ளார். அந்தி நேரத்தில் வெடிக்கும் துப்பாக்கியைப்போல் தம்முடைய மறைவான இடத்திலிருந்து பிட்டர்ன் பறவைகள் ஒலிப் பதைக் கேட்கக் கூடுமானுல் வசதியுடைய வீட்டிற்குள் வாழ்வதைக் காட்டிலும் குளிர்ந்த சதுப்பு நிலங்களில் வாழ் வதே மேன்மையானது: என்றும் கூறியுள்ளார். தம்மைச் சுற்றியுள்ள மனிதர்கள் அதிகப்படியான அளவுக்குக் கடுமையும், ஒழுக்கமும், தொழில் இயல்பும், பொதுமையும், விவாதிக்கும் இயல்பும், வீட்டுள் கட்டுப் படும் இயல்பும் பெற்றிருக்கக் கண்டார். காட்டில் அடிக்கடி சந்திக்கின்ற மூஸ் என்ற மாகனப்போல மனிதனும் ஒர் பிராணியாக இருக்கலாகாதா எனக் கருதினர். தமக்கென ஒரு தனி வாழ்வு வகுத்துக் கொண்டு பிறரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்கினர். "அமைதியும், விருப்பம் போல் வாழும் இயல்புமுடைய ஆசிய மக்களைப்போல” வாழ்வதாகக் கூறிஞர். அவர் மிகுதியும் விரும்பிய வாழ்க்கை முறையை, சமுதாயம், அவருக்குத் தர முடிய வில்லை : இந்நிலையில், சமுதாயத்திற்குப் பயன்படும் முறை யில் எத் தொண்டையும் செய்ய அவரும் தயாராக இல்லை. சமுதாயமும், அவரும் எதிர்ப் பாதைகளில் செல்வதாகவே தோன்றிற்று. தாம் அடிக்கடி விரும்பிச் செல்லும் ஒர் இடத்தைக் குறித்து 1840 இல் பின்வருமாறு எழுதினர் : "வால்டன் குட்டையின் கரையில் தங்கி, வெய்யில் காய்ந்து, அங்கே உள்ள கதகதப்பையும் ஒளியைபும் அனுபவிக்கும்பொழுது என் வாழ்வின் பழமை முழுவதை யும் மறந்து விடுகிறேன். எப்போதும்போல் சமுதாயம் இதே வழியில்தான் போய்க்கொண்டிருக்கும். ஆணுல் மலர் த குலம் முழுவதற்கும் இயற்கை ஏதாவது ஞானம் தருமா என ஆய்ந்து பார்த்தார். அந்தப் பொதுவான 38