பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு என்பது எது என்பதைப்பற்றி இந்நிலையில் அவர் ஒன்றுங்கூற இயலவில்லை. 1842 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்கூட, 'என்னுடைய வாழ்வில் கிடைக்கும் செல்வத்தை மக்கட்குப் பங்கிடுவதில் பயன் இல்லை. என்னிடத்தில் இருக்கும் மிக உயர்ந்த பொருளேயே அவர் கட்கு வழங்குவேன்... ... சூரிய ஒளியைப் பொது நன்மைக் காகவே திருப்பி விடுவேன் என்று கூறியுள்ளார். குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடன், வாழ்வில் ஒர் உடன் பாட்டு வகையில் அவர் உழைக்கத் தொடங்கு முன்பே, எமர்ஸனுடன் தங்கி வாழ்ந்த வாழ்க்கை முடிவுற்றது. இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு குறிக்கோளே அடைய முயன் ருர் ; அதாவது எழுத்து, சொற்பொழிவு ஆகியவற்றின் மூலமாகவே வாழ்க்கைக் குரிய வசதிகளைத் தேட விரும்பினர். மறுபடியும், இத் துறையில், எமர்ஸன் உதவிபுரியத் தயாராக இருந்தார். தம்முடைய தமையனுகிய வில்லியம் எமர்ஸனின் மைந்த னுக்கு ஆசிரியராக இருப்பதற்கு, தோரோவை, ந்யூ யார்க்கை அடுத்துள்ள ஸ்டேடன் தீவுக்கு அனுப்பினர். ந்யூயார்க்கிலுள்ள நூல் வெளியீட்டகங்கள், எழுத்துலகம் ஆகியவை அண்மையில் இருப்பதால் தோரோ இதில் அதிகப் பயன் பெற முடியும். - . அங்குத் தோரோ நண்பர்களைப் பெற்ருர், செய்தித்தாள், தொழில், புத்தக வெளியீட்டு வேலை, தனித்துவம், ஃபோ ரியர் கொள்கை ஆகியவைபற்றி மிகுதியாக அறிந்து கொண்டார். எனினும் தோல்வியே அடைந்தார். பொது மக்களுக்கு இரைபோடும் மலிவு இதழ்கட்டுத் தேவையான வற்றை எழுதினலொழிய ந்யூயார்க்கில் எழுத்தாளனுக வயிறு வளர்க்க முடியாதென்பதை அறிந்து கொண்டார். அந்த நாட்களில் கூட, மகளிர் பத்திரிகைகளே நிறைந்த அளவு பணம் தந்தன, மகளிர் துணைவன் என்ற.....இதழ் நிறையப் பணம் தருவதாகக் கூறினர்கள் ; ஆணுல் அவர் கட்குத் துணையாக நான் ஒன்றும் எழுத முடியவில்லே?" என்கிருர். இவைகளால் ந்யூயார்க்கை வெறுக்கவும், காங்க்கார்டை விரும்பவும் கற்றுக் கொண்டார். மிகுதியான Ae eT AAAA AAAA AAAA TTTTTTTS TTTT TTTAAA AAAA SAAAAAT ஓர் அச்சத்தையே விளைவித்தது. எழுத்துலகிலும் அவர் முன்னேற முடியவில்லை. செல்வம் நிறைந்த வில்லியம் 39