பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமர்ஸன்கள் மனச்சோர்வைத் தருங் கூட்டமாக அமைந் தனர். மேலும் அவருக்கு ப்ராங்கைட்டிஸ் நோயும் வந்து விட்டது; வீட்டிற்கு மீள்வதற்கே பெரிதும் விரும்பினர். எட்டு மாதங்கட்குப் பிறகு வீடு திரும்பிய அவர் இன்பத் திற்காக உலாவப் போவது தவிர வேறு எக்காரணத்தைக் கொண்டும் காங்க்கார்டை விட்டு வெளிச் செல்லவில்லை. நாடு கடந்திருந்த நிலைபற்றிச் சில நினைவுகள் அவரை விட்டு நீங்கவே இல்லை. அட்லாண்டிக் ச்முத்திரத்தின் கரையை நன்கு அனுபவித்தார்; புதிய மலர்களேக் கண்டு, புதிய. பறவைகளையும் மனிதர்களேயும் அறிந்து, வாழ்க்கை, அழகு ஆகியவற்றிலும் புதிய கோணங்களைக் கண்டார். ந்யூயார்க் கைப் பொறுத்தமட்டில் ஹராஸ் க்ரீலி என்ற உயிர் நண் பரைப் பெற்றிருந்தார் ; விரைவில் அவர் புகழ்பெற்ற *ந்யூயார்க் ட்ரிப்யூனின்: ஆசிரியராக ஆளுர். ஹென்றி ஜேம்ஸ் என்ற புதிய ஆசிரியரின் தந்தையாகிய ஹென்றி ஜேம்ஸ் என்பவருடன் தோரோ சிறந்த நட்புக் கொண் டார். நீண்ட நேரம் அந்தப் புனிதமான மனிதருடன் தத்துவ சாத்திரம் பற்றிப் பேசுவது தோரோவுக்கு மனக் கிளர்ச்சியைத் தந்தது. 1844 இன் தொடக்கத்தில் அவர் காங்க்கார்டுக்கு மீண்டுவிட்டார். 27 வது வயதிலேயே, தம்முடைய உயர்ந்த குறிக்கோளை விட்டுக் கொடாமலும், அதே நேரத் தில் வாழ்க்கைக்குத் தேவையான பொருளைச் சம்பாதிக் கவும் வேண்டிய தர்மசங்கடமான நிலைமையை அடைந்தார். காங்க்கார்டைச்சுற்றி அலைந்து ஆராய்வதிலும், அதனு டைய இயற்கை வரலாற்றை எழுதுவதிலும் ஈடுபட்டார். இயற்கை வல்லுநராக இருப்பதே தம் வாழ்வின் இலட்சியம் என்ற முடிவுக்கு வந்தார். வாழ்க்கையில் சுவை கான வேண்டுமாயின் இத் துறையில் தைரியமாக முன்னேறிச் சமுதாயத்தைப்பற்றிக் கவலைப்படாதிருக்க வேண்டும் : ஏனைய மக்களைப்போல வயது ஏற ஏற அவருடைய தேவைகள் மிகுதிப்படாமல் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்தார். தம் வாழ்க்கைக்குத் தேவையான மிக எளிய பொருள்களை அல்லாமல் பிறவற் றைப் பெற அவர் விரும்பவில்லை. எந்தப் பொருளே:ம் பெறுவதற்குச் செலவழிக்கப்ப்டும் நேரத்தைக் கொண்டே அந்தப் பொருளின் மதிப்பைக் கணக்கிட்டார். எமர்ஸ் 40