பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 4 "பணம் இல்லாவிடினும், நல்ல இளவேனிற் காலமும், சூரிய வெளிச்சமும் என்னிடம் நிறைந்து இருந்தன.” ... ... ... ., , * தோரோ : வால்டன் . விமர்ஸன், தாமே இயற்கையின் அருகாமையில் வாழ விரும்பியமையின், குட்டையை அடுத்துள்ள காட்டுப் பகுதி யில் ஒர் இடத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தை, இப்பொழுது தோரோவுக்கு, வாடகை இல்லாமற் கொடுத்தார் ; எனவே, தோரோ, மறுபடியும் எமர்ஸனுக்குக் கடமைப்பட்டவரானர். மகிழ்ச்சி தரும் இந்த நிகழ்ச்சி இல்லையாளுல், தோரோவுக்கு வால்டனில் ஒரு பர்ணசாலே அமைத்து வாழும் வாய்ப்பு ஏற்பட்டிராது. ஒராண்டுக்கு. முன்னர்த் தோரோவும் அவருடைய நண்பர் ஒருவரும் காட்டின் ஒரு பகுதியில் விருந்துண்கையில், அடுப்பு நெருப்பை அணைக்காமல் கவனக் குறைவாக இருந்து விட்டமையின், ஆற்றை அடுத்துள்ள நூறு ஏக்கர் பரப் புள்ள காட்டுப் பகுதி தீக்கிரையாயிற்று. உடன் இருந்த நண்பர், காங்க்கார்டின் முக்கியஸ்தரான நீதிபதி ஹோரின் பிள்ளையாக இருந்ததகுல்தான், தோரோ காடு தீப்பற்றிய தளுல் ஏற்பட்ட தொல்லைகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பினர். இந்த நிலையில் அந்தப் பிராந்தியத்திலுள்ள எந்த நிலச் சொந்தக்காரரும் தம்முடைய நிலத்தில் தோரோவை வாழவிட விரும்பவில்லை. 1847, மார்ச் மாதத் தில்தான்தோரோ தம் குடிசையைக் கட்டத் தொடங்கினர். இந்த மாதமே புதிய வாழ்க்கை தொடங்குவதற்கு ஏற்ற காலமாகும். குளிர் காலமும் அதனுல் ஏற்படும் மன உளைச் சலும் முடிந்து விட்டன. - ஏப்ரில் முதல் பகுதியில் பணிப் படலம் நிறைந்திருந்தது; குட்டையில் பனிக்கட்டி உருகிக் கொண்டிருந்தது. இரண்டு. வார காலம் அவர் தினந்தோறும் வால்டனுக்குக் கால்நடை ப. க.கே. சென்று, தம் குடிசை வேலையைக் கொஞ்சங், கொஞ்சமாகவே செய்து வந்தார். இந் நாட்களில், பைன் 42