பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரங்களின் மணம் நிரம்பிய காட்டிலேயே எளிய உண வாகிய ரொட்டியை உண்பதிலும், கோடரியால் தாம் மரம் வெட்டும் ஓசையைக் கேட்டு அங்கு வந்த பொதுமக்களுடன் பேசுவதிலும் பொழுதைக் கழித்தார். குட்டைக்கு மேல், பெரிதும் சிறிதுமாக வளர்ந்து குன்றை மூடியிருந்த கோனி பர்ஸ் மரங்களிலிருந்து வளேசல் இன்றி நெடிது வளர்ந்திருந்த வெண் பைன்களே ஒரு குடிசைக்குத் தேவையான அளவு: வெட்டிக் கொண்டார். கோடரியைக்கூடக் க்ட்ன் வாங்கும் தம் நிலேமை சுதந்தரமாக வாழ்க்கையைத் தொடங்குவ தாகுமா என்று அவர் கருதினுலும், முதல் இல்லாமல் ஒரு தொழிலைத் தொடங்க வேண்டுமானுல் இதனை விடச் சிறந்த வழி வேறு இல்லை. எனவே, தாம் கடன் வாங்கிய கோடரியைத் திருப்பிக் கொடுக்கையில், வாங் கும்பொழுது இருந்ததைக் காட்டிலும் இன்னும் தீட்டிக் கூர்மையாக்கித் தந்தார். அந்தக் கோடரி அகலமற்றதாக இருந்தது என்று அவரே கூறியுள்ளார். அது ஆங்கில நாட்டைச் சேர்ந்த நீண்ட வடிவுடைய கோடரியாகும். அதனைப் பயன்படுத்தியே, அவர், மூலைகளில் நடப்பட்ட கம்பங்களேச் சதுரிக்கும் பணியை முடித்தார். மேலும் சில கருவிகளேக் கடன் வாங்கி விட்டங்களின் பொருத்துவாய் களேச் செதுக்கி அவை ஒன்றுடன் ஒன்று இ8ணயுமாறு சேர்த்தார். பக்கங்களிலும், கூரையிலும் போடுவதற்குரிய மரப் பலகைகள் பக்கத்திலிருந்த குடிசையிலிருந்து கொண்டு வரப்பெற்றன. குட்டையை அடுத்துச் செல்லும் இருப்புப் பாதை போடப்பட்ட காலத்தில் அதில் பணியாற்றிய ஐரிஷ்காரர் ஒருவர் தங்க இந்தக் குடிசையை அமைத்திருந் தார். தோரோ அமைத்த குடிசை ஒரு வீடு போல் காட்சி யளிக்காமல், கலப்பு எருவைச் சேகரிக்கும் ஒரு திட்டைப் போலக் காட்சியளித்தது. ஏனென்ருல், குடிசைக்குள் வெப்பமாக இருப்பதற்காகக் குடிசையைச் சுற்றி 5 அடி உயரத்துக்கு மண் போட்டு நிரப்பி இருந்தார். இவ்வாறு மண்ணே இட்டு நிரப்பத் தோரோவுக்கு ஆன மொத்தச் செலவு 4 டாலர், 25 சதமாகும். இந்த மண்ணே ஒவ்வொரு வண்டியாக ஏற்றித் தம் மனே இடத்துக்குக் கொண்டு சென்ருர். வேலையற்றிருந்த ஓர் ஜரிஷ்காரர்-பார்வையாளர் பிரதிநிதியாக அங்கே இருந்தவர் போலும் - தோரோ வெளியே மண் கொண்டுவரச் சென்ற பொழுதெல்லாம் 43