அத்தியாயம் 1
இன்று நான் பெறும் எந்த அனுபவத்தையும், என் இளமைக் காலத்தில் பெற்ற அனுபவத்துடன் ஒப்பிட முடியாது......என் வாழ்வு ஆனந்தமயமாய் இருந்தது... ... ...'தோரோவின் நாட்குறிப்பு, 1851.
மெஸசூலிட்ஸில் ஏப்ரில் மாதத்தில் ஒரு நாள் ; நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. நியூ இங்கிலாந்தின் வசந்த காலம் அதனுடைய உச்ச நிலையை நோக்கி வேகமாகச் செல்கிறது. முடிவற்றது போன்றிருந்த குளிர் காலம் சில நாட்களிலேயே மறைந்துவிட்டது. பனி கரைந்தது ; ஆறுகள் நிரம்பி வடிந்தன; மொக்குகள் மலர்ந்தன; பறவைகள் பாடுகின்றன ; குதிரை செலுத்துபவர்கள் அவற்றை நோக்கிச் சீழ்க்கை அடிக்கின்றனர். எங்கும் வெயில் காய்கிறது. அட்லாண்டிக் கடல் மின்னுகிறது; கேப் காட் மணல் சூடேறுகிறது. கர்வம் நிறைந்த பாஸ்டனின் குறுகிய தெருக்களிலுங்கூடக் கதிரவன் ஒளி பாய்கிறது. காடுகளின் ஒதுக்குப் புறங்கள், பண்ணைகள், சதுப்பு நிலங்கள், மேற்கத்திய மலைகள் ஆகிய யாவற்றின் மேலும் பகலவனின் பொன்னொளி பரவுகிறது. பாஸ்டனிலிருந்து வடமேற்கில், இருபது மைல்கட்கு அப்பால் உள்ள காங்க்கார்டு என்ற ஒரளவு பெரிய கிராமத்தில், கதிரவன் காய்வதனால் அவரவர்கள் தத்தம் அலுவல்களைப் பார்க்கச் செல்கின்றனர். பலர் உழவு செய்யவும் பலர் நடவு நடவும் விரைகின்றனர். சிலருக்கு மரம் வெட்டும் காலம் குறுகி விட்டது ; வேறு சிலர் வசந்த காலத்தில் செய்ய வேண்டிய வீடு துப்புரவாக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்; மற்றுஞ் சிலர் தோட்ட வேலையில் ஈடுபடுகின்றனர். ஆனால் இவ்வாறு வெளியே செல்பவர்களில், தோரோவின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் காடுகளிலும் வயல்களிலும் சுற்றித் திரிந்து சூரிய ஒளியை அனுபவிக்கவில்லை. அக்குடும்பத்தினர் மட்டுமே காட்டில் l