பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நட்புக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தவிர, அவர்கள் உதவி அவசியம் தேவை என்பதனுலன்று என அவரே குறிப்பிட்டுள்ளார். அடுத்துக் குட்டையிலிருந்து பல கற்களைச் சேகரித்து, புகைப்போக்கியைக் கட்டத் தொடங்கினர். வீட்டின் கூரையைப் போடுமுன்பே புகைப் போக்கிக்கு அஸ்திவாரம் போட்டுக் கொண்டார். r 1845, ஜூலை 4 ஆம் தேதி, கூரையின் கடைசிப் பலகையைச் செருகியவுடனேயே தோரோ அக் குடிசையில் வாழத் தொடங்கி விட்டார். என்ருலும் நீர் கசிவதை அடைக்கும் வேலேயும், புகைப்போக்கியைக் கட்டும் வேலை யும் முடிவடையவில்லை. அமெரிக்காவின் சுதந்திர தினமாக வும் அவருடைய வாழ்க்கையின் சுதந்திர தினமாகவும். அந்த நாள் அ ைம ந் த து எதிர்பாரா நிகழ்ச்சிதான். குடிசையை அடுத்து 2; ஏக்கர் பரப்பில் அவர் வேளாண்மை செய்யத் தொடங்கிவிட்டமையால், உடனடியாகக் கட்டட வேலையைத் தொடர முடியாமற் போய்விட்டது. அந்த மண், வளமற்ற மணற்பாங்கான பூமியாக இருந்தமையின் மண்வெட்டியின் உதவி கொண்டே பீன்ஸ் முதலிய காய் கறிகளேப் பயிர் செய்ய நேரிட்டது. வசந்த காலத்தில் இப்பூமியில் உள்ள வேர்களே எல்லாம் வெட்டி எடுத்து விட்டு, வாடகைக்குக் குதிரைகளைப் பெற்று உழவு வேலையைச் செய்தார். மறைந்துபோன சிவப்பு இந்திய, இனத்தார் பயன்படுத்திய அம்புகள் பலவற்றை அவர் உழவு செய்யும் காலத்தில் கண்டு பிடித்தார். முதற். கோடையில் பீன்ஸ் செடிகளைப் பல வரிசைகளாக நட்டார். இவற்றின் மொத்த நீளம் ஏழு மைல் இருக்கும் என அவர் கணக்கிட்டார். முதலில் நட்டவற்றிற்குக் களை ப றி க் க. வேண்டிய காலத்திற்கூட அவர் மேலும் மேலும் புதிய நடவு செய்து கொண்டிருந்தமையின் பயிர் முழுவதிலும் களேகள் மண்டி விட்டன. கோடைக் காலம் முழுவதும், அப்பாத்திகளே நன்கு வெட்டிக் களை பறிப்பதில் ஒவ்வொரு நாளும் பல மணிகளைச் செலவிட்டார். ஆயினும் இந்த வேலே வெறுப்பை விளேக்கவில்லை. பீன்ஸ் செடிகளைப் பாராமரிப்பதன் மூலம் மனத்திலும் ஓர் அமைதியைப்பெறப் பழகிக் கொண்டார். அவரைச் சுற்றி வாழும் குடியானவ நண்பர்களேப்போல் தாம் தம்முடைய நிலத்துடன் கட்டுப் பட்டிருக்கவில்லை என்றும், தேவைப்பட்டால் தம்முடைய 45