பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீன்ஸ் வயலை உதறிவிட முடியும் என்றும், அதனுல் பெருந் தீங்கு ஒன்றும் நிகழ்ந்துவிடா தென்றும் நினைத்து அவர் மகிழ்ச்சியடைந்தார். கவலேயே அடையாத விவசாயி ஒருவர் உண்டு என்ருல் அது அவர் தாம். காங்க்கார்டுக்குச் செல்லும் சாலே அவருடைய வயலே அடுத்து இருந்தது. இரண்டு பாத்திகளின் நடுவே அவர் மறைந்து களே பறித்துக்கொண்டிருக்கும்பொழுது சாலை வழியே செல்லும் குடியானவர்கள் அவருடைய விவசாயத்தைப் பற்றிப் பேசும் கேலிப் பேச்சுகளைக் கேட்டு அவர் மகிழ்ச்சியடைவ துண்டு. இதில் வேடிக்கை என்னவென்ருல், இந்த வயலுக்குள் தனி மனிதராக, காலுக்குச் செருப்புக் கூட இல்லாமல் விவசாயம் செய்யும் மனிதர் பீன்ஸ் பயிரில் கொண்ட ஆர்வத்தால் கோடை காலத்தில் புல்லைத் தான் விளேவிப்பேன் :: என்று கூறும் பூமியை பீன்ஸையும் விளைவிப்பேன் என்று கூறுமாறு செய்வதற்காகத் தத்துவ சாத்திர முறையில் ஒரு துண்டு நிலத்தில் வேளாண்மை செய்து வந்தார் என்பதை அவர்கள் அறியவில்லை. நிலத்தைமட்டும் நம்பி வாழும் வாழ்க்கை தோரோவை மிகவும் கவர்ந்தது. மிகவும் வடக்கேயுள்ள மெஸாசூஸிட்ஸ் போன்ற பகுதிகளிற் கூட ஒரு மனிதன், அண்டை அயலார் தயவு இல்லாமல், தன் வளமான வாழ்வுக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்ள முடியும் STGŪT அவர் கருதினர். என்ருலும் பல்வேறு பயிர்ச் செடிகளே உண வாகக் கொள்ள முடியுமா எனப் பரிசோதனை நடத்திய துடன் நிறுத்திக்கொண்டு, தமக்குத் தேவையான அரிசி, மாவு, வெல்லம், போன்றவற்றை அவர் விலைக்கு வாங்கிக் கொண்டார். அவருக்குத் தேவையான ரொட்டியை அவரே தயாரித்துக் கொண்டார். முதலில் ஈஸ்டைக் கலந்து ரொட்டி தயாரித்தாலும், இறுதியில் பஞ்சுபோல் உப்பாத ரொட்டியே போதுமானது எனக் கண்டார். இதனுல் அயலிலுள்ள கிராமத்து ரொட்டிக்காரன் தயவும் அவருக்குத் தேவை இல்லாமல் போயிற்று. அவருக்கே உரிய முறையில் ரொட்டி சுடும் முறையை, முறையாக ஆராய்ந்தார். இது பற்றிப் பழமையான நூல்களேக் கற்ற பிறகு தமக்கே உரிய ஒரு முறையைக் கண்டுபிடித்தார். சுவைக்கு மிகச் சிறந்த முறையாக அமையாவிட்டாலும், அடிப்படை ணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தது 46