பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாமான்கள் உள்ளே செல்ல விரும்பாமல் இங்கேயே கிடக்க விரும்புவது போல் தெரிகிறது. இவற்றைப் பார்க்கும்பொழுது, ஒரு கித் தானே இவற்றின் மேல் விரித்து விட்டு, இங்கேயே அமர்ந்து விட வேண்டும் என்றும் தோன்றுகிறது. இந்தச் சாமான்களின் மேல் வெய்யில் அடிப்பதையும், காற்று வீசுவதையும் பார்ப்பதே அழகாக இருக்கிறது என்ற முறையில் தம் சிந்தனையைப் படர விட்டுத் தாமும் அமர்ந்து இருந்தார். வேனிற் காலத்தில் ஒவ்வொர் அழகிய நாளும், வால் டனில், கீழ்க்காணும் முறையிற் கழிந்தது. காலை 5; மணிக்கு எழுந்து குட்டையில் நீந்துதல், பின்னர் மண் வெட்டும் வேலை, அடுத்து எளிய காலே உணவை உட்கொள்ளுதல், அவ் வுணவுடன் குளிர்ந்த கிணற்று நீரை அருந்துதல், அடுத்து உடம்பில் ஒட்டியுள்ள மண்போக மறுபடியும் நீந்திக் குளித்தல், அதன்பின் மதிய உணவு கொள்ளுதல் என்பவையேயாம். சிற்சில சமயங்களில் மண் கொத்து வதற்குப் பதிலாகக் காலே நேரத்தைப் படிப்பதிலும், எழுது வதிலும் கழித்தார். அப்பொழுதும்கூட இரண்டாம் முறை குளித்தார். ஏனென்றல் "கற்கும்பொழுது ஏற்பட்ட க8ளப்புத் தீரவே - இக் குளியல் என்றுங் கூறிஞர். மதிய உணவுக்குப் பிறகு காங்க்கார்டு கிராமத்திற்குச் சென்று அன்ருடம் வீட்டிற் காணப்படும் எலிகளைப்பற்றி அறிவ. தற்குப் பதிலாக அங்குள்ள மக்களேப் பற்றி அறிய முற்பட் டார். அன்றியும் கிராமத்தில் பேசப்படும் வெட்டிப் பேச்சுக்கள் கூட, ஹோமியோபதி மருந்தைப்போல மிகச் சிறிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டால், இலேகளின் சலசலப்பையும், தவளேகளின் குரலையும் கேட்பதுபோல மகிழ்ச்சி தருவதாகும் ' என்பதை அவர் கண்டார். ஆளுல் அடிக்கடி கிராமத்தை நோக்கிச் செல்லும் இப் பாதைக்கு நேர் எதிராகச் சென்று, அடர்ந்த காட்டின் நடுவே சதுப்பு நிலத்தின் இடையே அமைதியை நாடி, அங்குள்ள செடிகள், பறவைகள் என்பவற்றைக் காண்பது டன், எழுதவும், படிக்கவும், சிந்திக்கவும் தொடங்கினர். * ஏைேய அறிஞர்களேர்ச் சந்திப்பதற்குப்பதிலாக குறிப்பிட் மரங்களைப் பலமுறை சென்று கண்டிருக்கிறேன். فتتم اختغ தகைய மரங்கள் சமீபமான இடங்களில் எங்கும் இல்லை. நீண்ட தூரத்தில் உள்ள புல்வெளிகளிலும், குன்றின் உச்சி 48