பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யிலும், காட்டின் நடுவேயுமே இவை உள்ளன. இரண்டடி விட்டமுள்ள அழகிய கரிய பர்ச் மரங்கள் சில உள. அவற் றின் உறவு முறையான மஞ்சள் பர்ச் மரங்கள் பொன்னிற முடையனவாய் முன்னவற்றைப் போலவே மணம் பரப்பு கின்றன. இருவகைப் பர்ச் மரங்களும் நீண்டு வ்ளர்ந்து எல்லா உறுப்புகளிலும் செழுமை மிக்கிருந்தன. இத்தகைய அழகிய மரங்கள் மிகவும் அபூர்வமானவை. நகரப் புறத்தில் ஒரே ஒர் இடத்தில் மட்டுமே கூட்டமாய் வளர்ந் துள்ளன. ஏதோ ஒரு காலத்தில் பீச் பருப்புக்களைத் தின்ற புருக்கள் எச்ச மிட்டதால் தான் இங்கு இம் மரங்கள் தோன்றின என்றும் கூறப்பட்டது. இந்த மரத்தைப் பிளக்கும்பொழுது காணப்படும் வெள்ளி நிறத் துணுக்குகள் அழகுடையன. அன்றியும் பாஸ்மரங்கள், ஹார்ன் பீம், செல்டிஸ், ஆக்ஸிடென்டலிஸ், போலியான எல்ம் ஆகிய வைகளும் இங்குண்டு. இந்த எல்ம் மரங்களில் ஒன்றும். பைன் மரங்களுள் சிலவும் மிக நீண்டு வளர்பவை. இவை மிகநீண்ட கிளைகளுடன் காட்டின் இடையேயுள்ள கோபுரம் போல் காட்சியளித்து நிற்கிறது, என்றும் எழுதியுள்ளார். தோரோ என்ருே ஒரு நாள் ஒரு மணி நேரந்தான் காட்டில் தம் தனிமையை உணர்ந்தார். ஆனல், உடனே : இந்தச் சிறிய சித்தப் பிரமை மறுமுறை வாராமல் ஒழிந்தது, அதன் பின்னர்த் தம் பொறி புலன்கள் அனைத் தாலும் இயற்கையை அனுபவித்தார்; அன்றியும் காட்டின் உறவே தமக்குப் போதுமானது என்பதையும் உணர்ந்தார். தனிமையாய் இருப்பதையே விரும்பிய அவர், தனிமை யைப் போன்ற ஓர் உற்ற துணைவன் வேறு யாரும் இல்லை : என்பதையும் அறிந்தார். அதே நேரத்தில் வால்டன் வாழ்க்கையில் அவர் அடைந்த பெரு மகிழ்ச்சி என்ன வென்ருல் அவருடைய குடிசையால் கவரப்பட்டுப் பலர் அங்கு வந்ததேயாகும். ஒரிரு தடவைகளில் இருபத்தைந்து பேருக்கும் மேற்பட்டவர்கள் அவருடைய வீட்டிற்கு வந்தனர்; உலகியல் கடந்த நண்பர் குழு மாலைப்பொழுதில் சிற்றுலாப் புறப்பட்டால் அதில் அதிக இன்பம் கிடைத்தது. குடிசை வாழ்க்கையில் உள்ள பெரு நன்மை என்ன வென்ருல், அங்கு வரும் விருந்தினர்கள் அங்கேயே தங்கி விட முடியாது. குறுகிய நேரமே அவர்கள் அங்குத் தங்க முடியும் ; எனவே, அதிக மகிழ்ச்சியைப் பெறவும் முடியும். 4. . 49