பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமீண்டும் அவர்கள் புறப்பட்டுப் போனவுடன் தனிமையின் இன்பத்தை அவர் பெற முடிந்தது. மக்களின் தொடர்பு வேண்டும் என்று அவர் விரும்பும் நேரங்களில், அரை மணி நேரத்தில் காங்க்கார்ட் கிராமத்தை அடைய முடியும். நண்பர்களும் அப்பக்கம் செல்ல நேர்ந்த மனிதர்களும், சனிக்கிழமைகளில் அவர் சுற்றத்தார் சிலரும், ஞாயிற்றுக் கிழமைகளில் ஹோஸ்மர் என்ற தத்துவம் நிறைந்த குடியானவரும் அவரை நாடி வந்தனர். குளிர்காலத்தின் மாலை நேரங்களில், அவருடைய கணப்புச் சட்டியைத் தவிர வேறு யாரும் இல்லாத நேரங்களில், குழல் வாசித்தும், தமக்கு முன்னர் அப் பிராந்தியங்களில் வாழ்ந் தவர்களைப் பற்றிச் சிந்தித்தும் தம் பொழுதைக் கழித்தார். வால்டன் பல ஏழை மக்களுக்குப் புகலளித்ததைத் தோரோவின் சம காலத்தவர்கள் நினைவு கூர்கின்றனர். இங்கு வாழ்ந்தவர்கள் சமுதாயத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களேயாவர். பலரும் தங்கியுள்ள இடங்களே ஒதுக்கிவிட்டுத் தனியான இடங்களில் வாழ்பவர்களிடமே அவருடைய பரிவு சென்றது. அதிலும் அவ்வாறு வாழ் பவர்கள் சுய மரியாதையும், தனிப்பட்ட இயல்பும் உடை யவர்களாயின், அவர்களிடம் இன்னும் அதிகப்படியான பரிவைக் காட்டினர். பாஸ்டன் மக்கள், தங்களிடையே வாழ்ந்த நாகரிகம் மிகுந்த பாங்கர்கள், கப்பல் முதலாளிகள், பேராசிரியர்கள், மத போதகர்கள் ஆகியவர்களைக் கொண்டாடுவதுபோலவே இவ்வாறு வாழ்ந்து மறைந்த ஏழை நீக்ரோக்களேயும் ஐரிஷ்காரர்களையும் கொண் டாடிஞர். கேட்டோ இங்ரம் என்ற நீக்ரோவிற்கு அவருடைய முதலாளியாகிய காங்க்கார்டு கிராமப் பிரமுகர் ஒருவர் வால்டன் காட்டில் ஒரு வீடு கட்டிக் கொடுத்தி ருந்தார். வால்நட் மரங்களின் இடையே சிறிய திட்டைப் போல் காணப்பட்ட கேட்டோவின் வீட்டைத் தோரோ கண்டார். கண்டதும், "ஒரு சிலருக்கு மட்டுமே தெரியக் கூடிய முறையில் பைன் மரங்களின் இடையே உள்ள அந்த வீட்டைப்பற்றிப் பாதி அழிந்துள்ள நிலவறையாகிய அந்த வீடு இன்னும் இருக்கிறது?’ என்பதையும் அவர் வெளிப் உடுத்திகும். அந்த இடம் இப்பொழுது மென்மையான சுமாக் கொடிகளால் நிறைந்திருப்பதுடன் டொன் கம்பி என்று கூறப்படும் செடியும் அங்கு நன்கு செழித்து வளர் 50