பக்கம்:தோரோ (மொழிப்பெயர்ப்பு).pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறது என்பதையும் அவரே கூறியுள்ளார். அடுத்து அவருடைய வயலின் ஒர் ஒரத்தில் ஜில்ஃபா என்ற நீக்ரோப் பெண்ணின் எளிய வீடு இருந்த அடை யாளம் காணப்படுகிறது என்றும், அவள் நூல் நூற்கும் தொழில் புரிந்தாளென்றும், வால்டன் காடு முழுவதும் கேட்கக்கூடிய முறையில் தன்னுடைய பெரிய குரலால் அவள் ஈடுவதுண்டு என்பதையும் அவர் கூறியுள்ளார். இந்த இடத்தை அடுத்து ப்ரிஸ்டர் ஃப்ரீமன் என்ற மாஜி அடிமை வாழ்ந்து வந்தான். அவன் வளர்த்த மரங்கள், சிடார் போன்ற ஆப்பிளே இன்னும் விளேவித்ததாகவும். அவன் ஞாபகார்த்தமாக அந்த ஆப்பிளே உண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஃப்ரீமனுடைய கல்லறைக்கும் தோரோ சென்று வந்தார். விடுதலைப் போரின் முதல் சண்டையில் காங்க்கார்டு கிராமத்திலிருந்து பிரிட்டிஷ் வீரர்கள் பின்வாங்கும்பொழுது வீழ்ந்துபட்ட சில பிரிட்டிஷ் வீரர்களின் பெயர் குறிக்கப்படாத கல்லறைகளின் ஊடே ஃப்ரீமனின் கல்லறையும் இருந்தது. "வால்டன் காட்டின் உட்பகுதிகளில் வைமான் என்ற குயவன் வாழ்ந்து வந்தான்; ... ... ... எனக்கு முன்னர் இக்காட்டில் வாழ்ந் தவன் ஹூ க்யோயில் என்ற ஐரிஷ்காரணுவான். அவன் வைமானின் குடிசையில் வாழ்ந்து வந்தான். கர்னல் ஹ9 க்யோயில் வாடர்லூச் சண்டையில் பங்கெடுத்துக் கொண்டவன் என்று ஊரார் பேசிக் கொண்டார்கள். ஒரு வேளே அவன் இப்பொழுது வாழ்ந்திருந்தால் அன்று அவன் நிகழ்த்திய போர்களே மறுபடியும் இன்று நிகழ்த்துமாறு கேட்டிருப்பேன். பள்ளந் தோண்டும் பணியை இங்குச் செய்து வந்தான் அவன். நெப்போலியன் ஸென்ட் ஹெலி ளுவுக்குச் சென்ருர், ஹல் க்யோயில் வால்டன் காட்டுக்கு வந்தான். அவனேப்பற்றி யான் அறிந்தவை எல்லாம் வருத்தத்தை உண்டாக்கும் செய்திகளேயாகும். ஒரு முறை மழையில் அகப்பட்டுக் கொண்ட தோரோ, ஒதுங்கு வதற்காக ஒடிக் காலியாகத் தோன்றிய ஒரு குடிசைக்குள் நுழைந்தார். அந்தக் குடிசையில் ஜான் ஃபீல்ட் என்ற ஐரிஷ்காரரும், அவருடைய மனைவியும் மக்களும் இருந் ததைக் கல டு மகிழ்ச்சியடைந்தார். கூரையின் எந்தப் பகுதியில் குறைந்த அளவு ஒழுக்கல் இருந்ததோ அந்தப் பகுதியில் அவர்கள் அனைவரும் ஒண்டிக்கொண்டிருந்தனர். 51